ஒரு வழியாக ஓவியா ஆர்மியின் ஆசையை தீர்த்து வைத்த ஆரவ்.. வைரலாகும் பீச் போட்டோ!

ஓவியாவுடன் எடுத்துக் கொண்ட செல்பியை வெளியிட்டுள்ளார் ஆரவ்.

Recommended Video

ஓவியாவை, ஹேலு என்று செல்லமாக கூப்பிட்ட ஆரவ் வைரல் வீடியோ

சென்னை: ரசிகர்களின் வேண்டுகோளை அடுத்து ஓவியாவுடன் சமீபத்தில் தான் எடுத்துக் கொண்ட செல்பி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆரவ்.

பிக் பாஸ் முதல் சீசனில் வெற்றியாளராக தேர்வானவர் ஆரவ். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, தன் சக போட்டியாளரான நடிகை ஓவியாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அப்போது அவர் ஓவியாவிற்கு அளித்த முத்தத்தை மருத்துவ முத்தம் எனப் பெயரிட்டு கமல் பிரபலமாக்கினார்.

ஆரவ்வுடன் ஏற்பட்ட காதல் காரணமாக பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் ஓவியா. நிஜ வாழ்க்கையில் ஓவியாவும், ஆரவ்வும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

நல்ல நண்பர்கள்:

நல்ல நண்பர்கள்:

ஆனாலும், தானும் ஓவியாவும் நல்ல நண்பர்கள் எனக் கூறி வருகிறார் ஆரவ். தற்போது தமிழில் அவர் ராஜபீமா என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சரியான வாய்ப்பாக அமைந்தால் தானும், ஓவியாவும் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்போம் என அவர் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

செல்பி ஆசை:

செல்பி ஆசை:

ஆனபோதும், தொடர்ந்து ஓவியாவுடன், அவர் செல்பி எடுத்து வெளியிட வேண்டும் என அவரது ரசிகர்கள் நச்சரித்து வந்தனர். அதற்கு நேரம் அமைந்தால் அப்படி ஒரு செல்பி எடுத்துப் பதிவிடுகிறேன் என ஆரவ்வும் உறுதி அளித்திருந்தார்.

புகைப்படம்:

புகைப்படம்:

அதன்படி, தற்போது கடற்கரையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆரவ். அதில், ஓவியாவுடன் அவர் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். கூடவே, ‘உங்களுக்காகத் தான் மக்களே இந்தப் புகைப்படம். இதில் ஹெலு, நான் மற்றும் சூப்பர்மேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

வைரலான புகைப்படம்:

இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதன் மூலம் ஆரவ், ஓவியாவை ஹெலு எனச் செல்லமாக அழைப்பது தெரியவந்துள்ளது. ஓவியாவின் முழுப்பெயர் ஓவியா ஹெலன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X