ஓவியா யாரு... பெருந்தன்மை தேவதை!
ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டம்.. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்ற ஆரவ் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த விழாவில் கலந்து கொள்ள தன்னுடன் பிக்பாஸ் வீட்டில் பங்கேற்ற நண்பர்களை அழைத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று கணேஷ் வெங்கட்ராம், ரைஸா, ஹரீஷ் உள்ளிட்டோர் கலந்து கொணடனர்.
யாரும் எதிர்பாராத சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் சிறப்பு நட்சத்திரம் ஓவியா பங்கேற்று நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கினார்.

ஆரவ்-ஓவியா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ்வுக்கும் ஓவியாவுக்கும் இடையே நடந்த அனைத்து விஷயங்களும் வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆரவ்வால் மன அழுத்தம் தாங்காமல் நிகழ்ச்சியைவிட்டு தானாக வெளியேறியவர் ஓவியா. இல்லாவிட்டால் அவர்தான் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக இருந்திருப்பார்.

ஓவியாவுக்கு மட்டுமே
இதில் கடுப்பான ஓவியாவின் ரசிகர்கள் ஆரவ்வை சமூக வலைத் தளங்களில் கடுமையாகத் தாக்கி வந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து சில வாரங்கள் ஆகியும்கூட இன்னும் ஓவியாவுக்கு மட்டும் ஆதரவாகவும், மற்றவர்களுக்கு எதிராகவுமே பார்வையாளர் மனநிலை உள்ளது.

ஓவியாவுக்கும்
இந்த நிலையில்தான் இன்று ஆரவ் தன் பிறந்த நாளைக் கொண்டாடினார். இதில் கலந்து கொள்ள தன் பிக் பாஸ் வீட்டு நண்பர்களை அழைத்திருந்தார். ஓவியாவுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

பிக்பாஸ் நண்பர்கள்
இதனை ஏற்று கணேஷ் வெங்கட்ராம், ஹரீஷ், காயத்ரி ரகுராம், ரைஸா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஓவியாவும் இதில் பங்கேற்று, பழசை மறந்து அனைவருடனும் கலகலப்பாகப் பழகி, படங்கள் எடுத்துக் கொண்டார்.

தேவதை
இந்தப் படங்களை கணேஷ் வெங்கட்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ஓவியா ரசிகர்கள், பழசை மறந்து பெருந்தன்மையாய் நேரில் போய் வாழ்த்திய தேவதை என வர்ணித்து கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











