»   »  ஓவியா பற்றி புது குண்டை தூக்கிப் போடும் ஆர்த்தி

ஓவியா பற்றி புது குண்டை தூக்கிப் போடும் ஆர்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரணி பற்றி ஓவியாவும் புகார் தெரிவித்ததாக நடிகை ஆர்த்தி கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்த பரணிக்கு தேவையில்லாமல் பொம்பள பொறுக்கி பட்டம் கொடுத்தார்கள் சக போட்டியாளர்கள். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார்கள்.

இந்த காரணத்தால் பரணி மன உளைச்சலுக்கு ஆளானார்.

பரணி

பரணி

பரணியை பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பொம்பள பொறுக்கி என்றாலும் பார்வையாளர்கள் அதை நம்பத் தயாராக இல்லை. நெட்டிசன்கள் பரணிக்கு ஆதரவாகவே இருந்தனர்.

எப்படி நம்பலாம்?

பரணி பத்தி தப்பா எல்லோரும் சொன்னா நீங்க எப்படி நம்பலாம்? உங்களுக்குன்னு புத்தி இருக்கு இனிமே இப்படி பன்னாதீங்க அங்க ஓவியா மற்றும் பரணி மட்டுமே நல்லவர்கள் என்று ரசிகர் ஒருவர் நடிகை ஆர்த்தியிடம் ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

ஆர்த்தி

பரணி பற்றி ஓவியா கூட தான் புகார் தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் எனக்கும் பரணிக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அனைவரும் அவருக்கு எதிராக இருந்தனர். பரணியிடம் இருந்து பதில் இல்லை என்று பதில் அளித்துள்ளார் ஆர்த்தி.

ஓவியா

ஓவியாவும் புகார் தெரிவித்தாரா? இல்லை பரணி மன உளைச்சலுக்கு ஆளான போது ஓவியா ஆதரவு அளித்தார். இதனால் தான் நீங்கள் வெளியேற்றப்பட்டீர்கள் என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

English summary
Actress Harathi tweeted that,'Oviya also complains about bharani!I personally had no problem with bharani but all men and women against him but no ans from bharani!!'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil