Don't Miss!
- Technology
பேரு Fastrack நியாபகம் இருக்கா? வெறும் ரூ.1495க்கு அறிமுகமான அட்டகாச ஸ்மார்ட்வாட்ச்: உச்சக்கட்ட சம்பவம்!
- News
"என் மனசில ஒன்னு இருக்கு".. ஆஹா, கார்த்தி சிதம்பரம் விடமாட்டார் போல.. யாரந்த "லீடர்".. நீளும் லிஸ்ட்
- Automobiles
இந்த சர்க்கஸ் பயணம் தேவையா...? பெங்களூர் டிராஃபிக்கை பற்றி தெரியாது போல!! இணையத்தில் வைரலாகும் வீடியோ
- Sports
உலகக்கோப்பையில் அஸ்வின் கேட்ட மாற்றம்.. கேப்டன் ரோகித் சர்மா ஆதரவுக்குரல்.. நிறைவேற்றுமா ஐசிசி!
- Finance
30% சம்பள உயர்வு.. 2023ல் சர்ப்ரைஸ்.. ஆசியாவிலேயே இந்தியா தான் டாப்பு..
- Lifestyle
தனுசு ராசியில் புதன் வக்ர நிவர்த்தியடைவதால் இன்று முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 7 ராசிக்கு எதிலும் வெற்றி தான்!
- Travel
ஜெனரல் டிக்கெட்டை வைத்துக் கொண்டு ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்யலாம் – இப்படி செய்தால் போதும்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
பூமர் அங்கிள் படத்தில் வொண்டர் உமனாக ஓவியா.. அப்போ யோகி பாபுவின் கான்ட்ராக்டர் நேசமணி என்னாச்சு?
சென்னை: இயக்குநர் சுவதீஸ் இயக்கத்தில் ஓவியா மற்றும் யோகி பாபு நடிப்பில் கான்ட்ராக்டர் நேசமணி என ஒரு படம் தொடங்கப்பட்டது.
ஆனால், அந்த படத்தை பற்றிய எந்த அறிவிப்பும் அதன் பிறகு வெளியாகாத நிலையில், தற்போது மீண்டும் அதே கூட்டணி இணையும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன.
வொண்டர் உமன் கெட்டப்பில் நடிகை ஓவியா போஸ் கொடுத்து நிற்க படத்திற்கு 2கே கிட்ஸ் உடல் பருமனானவர்களை கலாய்க்கும் பூமர் அங்கிள் என்கிற கேட்சியான டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.
கமல்ஹாசனின்
விக்ரம்
படத்தை
பார்த்த
மகேஷ்
பாபு..
அட
என்ன
இப்படி
சொல்லிட்டாரே!

பிக் பாஸுக்கு பிறகு
கேரளத்து பெண்ணான ஓவியா களவாணி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்தன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியாவுக்கு அவரது ஓப்பன் மைண்ட் கேரக்டர் பிடித்துப் போக ரசிகர்கள் அவருக்கு ஆர்மி அமைத்து கொண்டாடினர். பிக் பாஸுக்கு பிறகு ஓஹோன்னு வரப் போகிறார் ஓவியா என எதிர்பார்த்த நிலையில், காஞ்சனா 3 படத்தை விட பெரிய படம் எதுவும் அவருக்கு அமையவில்லை.

எவ்ளோ கூப்பிட்டும் வரல
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், ஜூலி, வனிதா விஜயகுமார், அனிதா, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்த நிலையில், ஓவியா நிச்சயம் வருவார் என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஏகப்பட்ட எதிர்மறை ட்வீட்களை போட்ட ஓவியா அந்த நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.

கான்ட்ராக்டர் நேசமணி
முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகரான யோகி பாபுவுக்கு ஜோடியாகி விடலாம் என நினைத்து கான்ட்ராக்டர் நேசமணி டைட்டிலில் ஒரு படத்தில் ஒப்பந்தமானார் ஓவியா. சுவதீஸ் எனும் அறிமுக இயக்குநர் இயக்கத்தில் அந்த படம் உருவாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், அதன் பின்னர் அந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

பூமர் அங்கிள்
இந்நிலையில், நடிகை ஓவியா மற்றும் யோகி பாபு நடிப்பில் அதே இயக்குநர் இயக்கத்தில் பூமர் அங்கிள் என்கிற டைட்டிலில் புதிய படம் ஒன்று வெளியாக உள்ளதாக தற்போது நடிகை ஓவியா தனது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவித்துள்ளார். வொண்டர் உமன் காஸ்ட்யூமில் தலையில், பூமர் அங்கிள் என்பதற்கு ஏற்றவாறு B என்கிற சிம்பிள் உடன் இருக்கும் க்ரீடத்தை அணிந்திருக்கிறார்.
Recommended Video

அதுதான் இதுவா
கான்ட்ராக்டர் நேசமணி படத்தின் தலைப்பு தான் இப்படி பூமர் அங்கிள் என மாற்றப்பட்டுள்ளதா? அல்லது இரண்டும் வேறு வேறு படங்களா? அந்த படம் நிறுத்தப்பட்டு இந்த புதிய படத்தை இயக்குநர் ஆரம்பித்து இருக்கிறாரா? என எதையும் தெளிவாக சொல்லாத நிலையில், ரசிகர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த பூமர் அங்கிள் ஆவது ரெடியாகி சீக்கிரம் ரிலீஸ் ஆனால், போதும் என்கிற நிலையில் தான் ஓவியா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து.. விஜய் ஆண்டனிக்கு காயம்.. மருத்துவமனையில் அனுமதி!
-
சவுண்டு சரோஜா பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி...வந்ததும் வராததுமா அசீமை அசிங்கப்படுத்திய பிரியங்கா!
-
தயாரிப்பாளர் தில் ராஜுக்கு விடிவி கணேஷ் கற்றுக் கொடுத்த பாடம்.. வாரிசு சக்சஸ் மீட்டில் கலகலப்பு!