இவ்வளவு சீக்கிரம் நிறைவேறிய ஓவியா-ஆரவ் ரசிகாஸின் ஆசை: போட்ரா வெடிய
Recommended Video

சென்னை: ஆரவின் ராஜபீமா படத்தில் அவருடன் சேர்ந்து நடித்துள்ளார் ஓவியா.
பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ், ஓவியா இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அதில் இருந்து அவர்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியானால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஆரவ், ஓவியா ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. அவர்களின் ஆசை நிறைவேறியுள்ளது.

ஆரவ்
ஆரவ் நடித்து வரும் ராஜபீமா படத்தில் ஆஷிமா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஓவியா தனது நண்பர் ஆரவுடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
ஓவியா
ராஜபீமா படத்தில் ஓவியா கவுரவத் தோற்றத்தில் மட்டும் வரவில்லை என்று புது தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஆரவ்.
மகிழ்ச்சி
ஆரவ் ட்வீட் போட்ட வேகத்தில் பதில் அளித்துள்ளார் ஓவியா. அதாவது அவர் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார் ஓவியா.
காத்திருப்பு
ஆரவ், ஓவியாவை சேர்ந்து திரையில் பார்க்க அவர்களின் ரசிகர்கள் வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











