சோனமுத்தா போச்சா: ஆரவை பார்த்து கேட்கும் ஓவியா ஆர்மி
சென்னை: சோனமுத்தா போச்சா என்று ஓவியா ஆர்மி ஆரவை பார்த்து கேட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு படங்கள், விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வருகிறது. சிலம்பாட்டம் புகழ் சரவணன் இயக்கத்தில் ஆரவ் நடிக்க உள்ளார்.
கிரகணம் இயக்குனர் இளனின் அடுத்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா ஜோடியாக நடிக்கிறார்கள்.

படங்கள்
பிக் பாஸ் வீட்டில் இருந்ததன் மூலம் பிரபலமான ஓவியாவுக்கும் பட வாய்ப்புகள் வந்து குவிகின்றது. படங்கள் தவிர விளம்பர படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

ஹரிஷ்
இளன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் ஆரவிடம் கேட்டதற்கு அவர் அதிக சம்பளம் கேட்டுள்ளார். இதையடுத்தே ஹரிஷ் கல்யாணை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கிண்டல்
ஆரவுக்கு வந்த வாய்ப்பு ஹரிஷ் கல்யாணுக்கு சென்ற விபரம் அறிந்த ஓவியா ஆர்மிக்காரர்கள் சோனமுத்தா போச்சா ஏன் இந்த வேலை என்று கேட்டு வருகிறார்கள்.

பெருந்தன்மை
ஆரவின் பிறந்தநாள் பார்ட்டியில் ஓவியா கலந்து கொண்டார். ஆரவுடன் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். அவரின் பெருந்தன்மையை பார்த்த ஓவியா ஆர்மி தங்களின் தலைவியை நினைத்து பெருமைப்படுகிறது.


Click it and Unblock the Notifications











