பிக்பாஸ்க்கு தடை.. ஓகேவா, இல்லையா? ஓவியா திடீர் கேள்வி..மறந்துட்டீங்களா அதை? விளாசும் நெட்டிசன்ஸ்!

By

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்வது பற்றி நடிகை ஓவியா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

Bigg Boss 4 இந்த 2020 ல் நடக்குமா? • Kamal Hassan

விமல் நடித்த களவாணி படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவார் மலையாள நடிகை ஓவியா.

அதற்கு முன், வினயன் இயக்கிய நாளை நமதே என்ற படத்தில் நடித்திருந்தார்.

சுந்தர்.சியின் கலகலப்பு

சுந்தர்.சியின் கலகலப்பு

பிறகு மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, சுந்தர் சியின் கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர் கூடம் உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடினார். கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் ஓவியா, கடைசியாக களவாணி 2 படத்தில் நடித்திருந்தார்.

ஓவியா ஆர்மி

ஓவியா ஆர்மி

அடுத்து, பிக்பாஸ் ஆரவ்வுடன் ராஜபீமா உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பங்கு பெற்ற மற்றப் போட்டியாளர்களை விட, நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து. 'ஓவியா ஆர்மி' என்ற பெயரில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.

ரசிகர்கள் பட்டாளம்

ரசிகர்கள் பட்டாளம்

சமூக வலைதளங்களிலும் அவருக்குத் தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இந்நிலையில் சமீபகாலமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார் நடிகை ஓவியா. அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கு ட்விட்டரில் அதிரடியாக பதிலளித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, ரசிகர்களின் கேள்விகளுக்குப் பரபரப்பு பதில் அளித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

இந்நிலையில், இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்வதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா இல்லையா? என்று பரபரப்பாகக் கேட்டுள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் கண்டபடி கமென்ட் போட்டுள்ளனர். சிலர் அதை தடை செய்வது நல்லதுதான் என்று கூறியுள்ளனர். ஒருவர், அதன் மூலமாகத்தான் நீங்கள் இன்னும் பிரபலமானீர்கள். அதை ஏன் தடை செய்ய வேண்டும்? என்று கேட்டுள்ளார்.

மறந்துடாதீங்க

மறந்துடாதீங்க

ஒருவர், இதுபற்றி போல் ட்வீட் போடுங்க, நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இன்னொருவர், பிக்பாஸ் இல்லைனா, நீங்களே இல்லை. அதுதான் உங்களை இவ்வளவு பிரபலம் ஆக்கி இருக்கு. அதை மறந்துட்டீங்களா? என்று கூறியுள்ளார். 'பிக்பாஸ் நிகழ்ச்சி, பல இளம் திறமைசாலிகளை வெளியே கொண்டுவர்றதுக்கான மேடையா இருக்கு. அதை ஏன் தடை பண்ணணும்? என்று ஒருவர் கேட்டுள்ளார்.

டார்ச்சர் கூடாது

டார்ச்சர் கூடாது

ஒரு நெட்டிசனின் கேள்விக்குப் பதிலளித்துள்ள ஓவியா, டிஆர்பி-க்காக, போட்டியாளர்களை தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவர்கள் டார்ச்சர் பண்ணிவிட கூடாது என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பும் ஊதியத்தை பெறுவதற்கு முன் போட்டியாளர்கள் இதுபற்றி யோசிக்கணும் என்று ஒருவர் கூறியுள்ளார். இது சமூக வலைதளத்தில் பரபரப்பாகி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X