Bigg Boss Tamil 7: அப்போ ஓவியா பிக் பாஸ் 7க்கு வரப்போறது இல்லையா?.. இதைத்தான் அப்படி சொல்லிட்டாரோ?
சென்னை: சமீபத்தில் நடிகை ஓவியா பேட்டி ஒன்றில் பேசும் போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்துள்ளனர் என்றதுமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரப்போகிறாரா என்றும் அல்லது சில நாட்கள் வீட்டில் தங்குவாரா என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற விட்டனர்.
ஆனால், தற்போது பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்போ ஓவியா பிக் பாஸுக்கு வரமாட்டாரா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர்.

பிக் பாஸ் சிசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஓவியாவுக்கு இன்னமும் பிக் பாஸ் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்ட் மியூசிக்கில் ஓவியா: விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா சக பிக் பாஸ் பிரபலங்களுடன் கலந்து கொண்ட புகைப்படங்களை ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் பிரபலங்களான ஓவியா, ஜூலி, சுஜா வருணி, ரித்விகா, செண்ட்ராயன் உள்ளிட்ட பலர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அதன் அட்டகாசமான போட்டோக்களை பிக் பாஸ் ஜூலி ஷேர் செய்து லைக்குகளை அள்ளி உள்ளார்.
பிக் பாஸுக்கு வரலையா: விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலங்கள் எல்லாம் கலந்து கொள்ளப் போகின்றனர் என அழைப்பு விடுக்கப்பட்டதைத் தான் நடிகை ஓவியா பிக் பாஸ் செலிபிரேஷனுக்கு கூப்பிடுறாங்கன்னு சொல்லிட்டாரா என ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு வந்ததை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் ஓவியா வந்தா சூப்பரா இருக்கும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பிக் பாஸ் ஆரம்பிக்கும் நாள்: ஏற்கனவே கெஸ் பண்ணி சொன்னதை போலவே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1ம் தேதியே ஆரம்பிக்கிறது என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதிய ப்ரோமோவுடன் விஜய் டிவி வெளியிட்டு இருந்தது.
இரண்டு வீடுகள் இந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள நிலையில், ஒரு வீட்டில் பழைய போட்டியாளர்களும் ஒரு வீட்டில் புதிய போட்டியாளர்களும் வருவார்களா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











