'ஆரவ்வா... ம்ஹூம்..!' நடிக்கக் கேட்டதுமே நோ சொன்ன ஓவியா!

By Vignesh Selvaraj

Recommended Video

ஆரவ்வா! பெயரை கேட்டதுமே நோ சொன்ன ஓவியா!-வீடியோ

சென்னை : ஆரவ் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஓவியாவை நடிப்பதற்காகக் கேட்க, அவர் ஹீரோ பெயரைக் கேட்ட உடனேயே நடிக்க மறுத்திருக்கிறார்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரவ் ஏற்கனவே 'ஓ காதல் கண்மணி', 'சைத்தான்' உட்பட சில படங்களில் சிறிய கேரக்டர்களில் துணை நடிகராக முகம் காட்டியவர்.

தற்போது ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்ற பிறகு கதாநாயகனாக நடிக்க முயற்சி செய்து வரும் அவர் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

சரவணன் இயக்கம்

சரவணன் இயக்கம்

சிம்புவை வைத்து 'சிலம்பாட்டம்' படத்தை இயக்கிய சரவணன், கௌதம் கார்த்திக்கை வைத்து 'சிப்பாய்' என்ற படத்தை இயக்கினார். ஏறக்குறைய 3 வருடங்களுக்கு மேலாக அந்தப் படம் முடங்கியே கிடக்கிறது.

ஆரவ் ஹீரோ

ஆரவ் ஹீரோ

இந்நிலையில், ஆரவ்வை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் சரவணன். ஏற்கெனவே 'சிலம்பாட்டம்' படத்தை இயக்கிய சரவணன் அதன் பிறகு எத்தனையோ ஹீரோக்களை வைத்து படம் இயக்க முயற்சி செய்தார். எதுவுமே வொர்க் அவுட் ஆகவில்லை.

ஓவியா நாயகியாக?

ஓவியா நாயகியாக?

கௌதம் கார்த்திக், லட்சுமி மேனன் நடிப்பில் தொடங்கப்பட்ட 'சிப்பாய்' படமும் முடங்கிவிட்டது. எனவே ஆரவ்வை வைத்து இயக்கும் படத்தை பரபரப்பாகப் பேசவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓவியாவை கதாநாயகியாக நடிக்க அணுகியுள்ளார்.

நடிக்க மறுத்த ஓவியா

நடிக்க மறுத்த ஓவியா

ஆரவ் ஹீரோ என்று சொன்னதுமே கதையைக் கூட கேட்காமல் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம் ஓவியா. நம்பிக்கை துரோகத்தை ஓவியா இன்னும் மறக்கவில்லை போலிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X