'என்ன ஓவியா இப்டி பண்ணிட்டீங்க'... ரசிகர்கள் மன வேதனை!
சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ஓவியாவின் கதாபாத்திரம் ஏமாற்றமடைய செய்துள்ளது.
Recommended Video

சென்னை : சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ஓவியா நடித்துள்ள கதாபாத்திரம் அவரது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
களவாணி படத்தின் மூலம் அறிமுகமான ஓவியாவின் மார்க்கெட் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ராக்கெட் வேகத்தில் ஏறியது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது, ஓவியாவை ஆதரித்து அவரது ரசிகர்கள் ஆர்மி ஒன்றையே உருவாக்கினர்.
அந்த அளவுக்கு செல்வாக்கை சம்மாதித்த ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார். களவாணி 2, சிலுக்குவார்பட்டி சிங்கம் என ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

எந்த படம் ரிலீசாகவில்லை
ஆனால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட ஓவியா நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. இதனால் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாமலேயே இருந்தது.

சிலுக்குவார்பட்டி சிங்கத்தில் ஓவியா
இந்நிலையில் தான் விஷ்ணு விஷாலுடன் ஓவியா நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் நேற்று திரைக்கு வந்தது. இதில் ஓவியாவின் கதாபாத்திரம் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இரண்டாவது ஹீரோயின்
சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் ஹீரோயின் ரெஜினா கஸண்ட்ரா. இரண்டாவது ஹீரோயின் தான் ஓவியா. ஆனால் அவரது கதாபாத்திரம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சிங்கப்பூர் புகழ் கனகாவாக, கோவில் திருவிழாவில் ஆடும் ஐட்டம் டான்ஸராக வருகிறார்.

ஒரேயொரு பாடல்
படத்தில் அவருக்கு ஒரேயொரு பாடலும், ஒப்புக்கு மூன்று சீன்களும் தான் உள்ளன. அதுவும் முக்கியமான காட்சிகள் எதுவும் அவருக்கு இல்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்து தியேட்டரில் இருந்து புலம்பியபடியே வெளியே வருவதை நம்மால் பார்கக முடிகிறது.

ரசிகர்கள் ஏமாற்றம்
தற்போது ஓவியாவுக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கை நன்றாக அறுவடை செய்யும் வகையில், அவருக்கு நல்ல கதாபாத்திரங்களை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பை ஓவியாவும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications











