twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ட்வீட் போட்டுருக்காய்யா தலைவி ஓவியா ட்வீட் போட்டுருக்காய்யா

    By Siva
    |

    Recommended Video

    பிக் பாஸ் வீட்டுக்கு வருவது பற்றி ஓவியா டிவீட்-வீடியோ

    சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ரசிகர்களுடன் லைவ் சேட் செய்வதாக நடிகை ஓவியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பி வருமாறு ரசிகர்கள் ஓவியாவை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் 100வது நாள் நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.

    ஓவியா செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் மகிழ்கிறார்கள்.

    லைவ் சேட்

    லைவ் சேட்

    ட்விட்டரில் ஓவியாவுடன் லைவ் சேட் செய்ய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்குமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் இது குறித்து ஓவியா ட்வீட்டியுள்ளார்.

    ஓவியா

    லைவ் சேட் செய்யுமாறு பலர் ட்வீட்டுவதை பார்க்க முடிகிறது. அப்படி செய்ய எனக்கு ஆவலாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடந்து முடிந்த பிறகு சாட் செய்யலாம் என்று ஓவியா இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    மகிழ்ச்சி

    ஓவியாவின் ட்வீட்டை பார்த்த அவரின் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்கு 100வது நாள் வருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    படங்கள்

    படங்கள்

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போட்ட ஒப்பந்தத்தால் ஓவியாவால் புதுப் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கமல்

    கமல்

    கமல் ஹாஸன் எப்பொழுத்து ட்வீட்டுவார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவருக்கு அடுத்தபடியாக ஓவியாவின் ட்வீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

    English summary
    Actress Oviya tweeted that, 'Could see many tweets asking for a live chat.. eager and excited to do one, just like y'all. Shall chat once BB's 100 days gets completed'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X