Oviya - கல்யாணம் ஆகல... ஆனால் ஒரு குழந்தை இருக்கு.. ஷாக் கொடுத்த ஓவியா
சென்னை: Oviay (ஓவியா) தனக்கு திருமணம் ஆகவில்லை எனினும் ஒரு குழந்தை இருப்பதாக நடிகை ஓவியா தெரிவித்திருக்கிறார்.
களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஓவியா. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிடைத்த படங்களும் சரியாக ஹிட்டாகவில்லை. கலகலப்பு படம் மட்டும் நன்றாக ஓடியது. ஆனால் அந்தப் படத்தில் ஓவியா பெரிதாக யாரின் கவனத்தையும் ஈர்க்கவில்லை.

பிக்பாஸ்: பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டார். அதில் ஓவியாவின் செயல்பாடுகளை பார்த்த ரசிகர்கள் ஓவியாவுக்கென்று ஆர்மியை ஆரம்பித்தார்கள். அவரை வைத்து மீம்ஸ்களையும் சமூக வலைதளங்களில் பரப்பினர். ரொம்பவே ஃபேமஸ் ஆனதால் ஓவியாதான் முதல் சீசனில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார்.
காதல்: இதற்கிடையே பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா தனது சக போட்டியாளர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருந்தார். எனவே இரண்டு பேரும் காதலிப்பதாக பலரும் கூறினர். ஆனால் இரண்டு பேருமே அதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்தனர். பிக்பாஸ் முடிந்த பிறகு இரண்டு பேரும் திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அந்தவகையில் ஓவியா காஞ்சனா 3, 90 எம்.எல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பையே பெற்றது.
திருமணம் இல்லை: ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் பிக்பாஸுக்கு பிறகும் இல்லாததால் திருமணம் செய்துகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அதற்கு காரணம் ஆரவ்தான் என கூறப்பட்டது. ஆனால் அதனை அவர் மறுத்தார். மேலும் ஓவியா ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் அதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் கூறினர்.

மறுத்த ஓவியா: அதற்கு சமீபத்திய பேட்டியில் விளக்கமளித்த ஓவியா, நான் தன் பாலின ஈர்ப்பாளர் எல்லாம் இல்லை. எனக்கு திருமணத்தின் மீது இப்போதைக்கு நாட்டம் இல்லை. நடித்துக்கொண்டே இருப்பதில்தான் ஆசை என்றார். இதற்கிடையே ஓவியாவுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. அதை அவர் மறைத்து வருகிறார் எனவும் தகவல்கள் வெளியாகின.
ஆம் குழந்தை இருக்கிறது: பேட்டியில் இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் சொன்ன ஓவியா, "எனக்கு திருமணம் ஆகவில்லை. எனக்கு குழந்தை இருக்கிறதுதான். அது என் நாய்க்குட்டி. அதை நான் குழந்தை போல்தான் பார்த்துக்கொள்வேன். அதற்கு நான் சோறு ஊட்டுவேன். அதுமட்டுமின்றி அந்த நாய்க்குட்டி என் அருகில்தான் படுக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











