இதெல்லாம் நடக்குது, அது மட்டும் நடக்க மாட்டேங்குது: ஓவியா ரசிகர்கள் கவலை

By Siva

Recommended Video

ஓவியா- ஆரவ்வுக்கு மட்டும் அது ஒர்க் அவுட் ஆகவில்லையே.. வீடியோ

சென்னை: ஒரு புதுப்பட அறிவிப்பை பார்த்து தான் ஓவியா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஆரவ், ஓவியா இடையே நட்பு ஏற்பட்டது. அவர்கள் நாங்கள் நண்பர்களே என்று கூறினாலும் அதை நம்ப யாரும் தயாராக இல்லை.

அவர்கள் நிச்சயம் காதலர்கள் தான் என்று கூறப்பட்டு வருகிறது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ஆரவும், ஓவியாவும் சேர்ந்து ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று இருவரின் ரசிகர்களும் விரும்புகிறார்கள். ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க அவர்களும் தயாராகத் தான் உள்ளனர். ஆனால் இதுவரை சரியான ஸ்க்ரிப்ட் கிடைக்கவில்லையாம். நல்ல கதை கிடைத்தால் சேர்ந்து நடிப்போம் என்கிறார்கள் அவர்கள்.

நிஜம்

நிஜம்

ஓவியா, ஆரவ் சேர்ந்து நடிக்கும் படம் என்ற செய்தியை அவர்களின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க பிக் பாஸ் பிரபலங்கள் இருவர் ஜோடி சேரும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த பிரபலங்கள் மகத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா தான். அவர்கள் ஒரு ரொமான்டிக் காமெடி படத்தில் நடிக்கிறார்கள்.

ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா வில்சனும், ஹரிஷ் கல்யாணும் சேர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் ஜோடி போட்டனர். அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மகத்தும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள். ஆனால் ஆரவ், ஓவியா படம் மட்டும் இன்னும் செட்டாகவில்லை.

ராசியில்லை

ராசியில்லை

ஹரிஷும், ரைசாவும் சேர்ந்து நடித்தாகிவிட்டது, மக்ததும்-ஐஸ்வர்யாவும் நடிக்கப் போகிறார்கள். தலைவி ஓவியாவும், ஆரவும் சேர்ந்து நடிப்பது எப்பொழுது என்று அவர்களின் ரசிகர்கள் கேட்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவர்கள் ஜோடியாக நடிப்பது வழக்கமாகிவிட்டது. இது ஒரு ராசி போன்று. ஆனால் அந்த ராசி ஆரவ், ஓவியாவுக்கு மட்டும் இன்னும் ஒர்க்அவுட் ஆகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X