ஐட்டம் என்று கேவலப்படுத்திய நெட்டிசன்: நெத்தியடி கொடுத்த ஓவியா
சென்னை: ட்விட்டரில் தன்னை ஐட்டம் என்று விமர்சித்தவருக்கு முகத்தில் அறைந்தது போன்று பதில் அளித்துள்ளார் ஓவியா.
ஓவியா ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். தனக்கு பிடித்த தமிழ் பாடல், கிரிக்கெட் வீரர், ஐபிஎல் அணி என்று பலவற்றை பற்றி தெரிவித்தார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஓவியாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்டார்.

ஐட்டம்
ஓவியாவை பார்த்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட ரசிகரிடம் நெட்டிசன் ஒருவர் ஐட்டமை திருமணம் பண்ணி என்ன பண்ண போற என்று கேட்டார். பின்னர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.
ஓவியா
தன்னை ஒருவர் ஐட்டம் என்று கூறியதை பார்த்த ஓவியா ஐட்டம் உங்கம்மா என்று பதில் அளித்தார்.
ரசிகர்கள்
ஓவியா தைரியமானவர், வெளிப்படையாக பேசுவார் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்படி முகத்தில் அடித்தது போன்று பதில் அளித்ததை பார்த்து ரசிகர்களே லைட்டா மிரண்டுவிட்டனர்.
புகைப்படம்
ஓவியாவை கேவலமாக விமர்சித்தவர் தனது டிபியில் தல புகைப்படத்தை வைத்துள்ளார். அதை பார்த்த தல ரசிகர்கள் அந்த புகைப்படத்தை நீக்குமாறு கூறியுள்ளனர். உண்மையான தல ரசிகன் ஒரு பெண்ணை அசிங்கப்படுத்த மாட்டான் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











