Oviya: நான் லெஸ்பியனா? என் அந்தரங்க வாழ்க்கை நல்லாத்தான் இருக்கு.. ஓவியா சொன்ன அந்த விஷயம்!
சென்னை: விமல் நடித்த 'களவாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் ஓவியா. முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர கலகலப்பு, மெரினா, மூடர்கூடம், மத யானைக்கூட்டம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தன்னை குறித்து வரும் சர்ச்சைக்கு எப்போதும் சரியான பதிலடி கொடுத்து வரும் ஓவியா, தன் செக்ஸ் வாழ்க்கை நன்றாக இருப்பதாக பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகை ஓவியா திரைப்படத்தில் நடித்து பிரபலமானதை விட, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேர்மையாக விளையாடி இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். கடந்த நாட்களுக்கு முன் ஓவியாவின் ஆபாச வீடியோ போன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இருக்கும் டாட்டூவை பார்த்த ரசிகர்கள் அது ஓவியா தான் என்றனர். அதே போல, வீடியோவில் இருப்பது நான் இல்லை, மார்பிங் வீடியோ என்று ஓவியா மறுப்பு தெரிவிக்காமல், இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு தைரியமாக பதில் அளித்தார்.

நடிகை ஓவியா: சிலர் ஓவியாவின் பதிலை பாராட்டினாலும், பலர் இதெல்லாம் ஒரு பதிலா என அவரை கடுமையாக விமர்த்தனர். இதைத்தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஓவியா புகார் அளித்திருந்தார். ஓவியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ஓவியாவின் மேலாளர் புகார் கொடுத்தார். மேலும், அந்த வீடியோவை நீக்கும்படி திருச்சூர் சைபர் கிரைம் போலீசாரிடம் ஆன்லைனில் புகார் அளித்ததை அடுத்து அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது.
லெஸ்பியனா: தற்போது நடிகை ஓவியா youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். இதில் தொகுப்பாளர், நீங்கள் லெஸ்பியன் என்பதால். திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பல கருத்துக்கள் இணையத்தில் பரவி வருவது குறித்து என்று கேள்வி அனுப்பினார். இதற்கு பதில் அளித்த ஓவியா, நான் லெஸ்பியன் இல்லை அப்படி தேவையில்லாத கருத்துகளாக சிலர் பரப்பி வருகிறார்கள். என்னுடைய செக்ஸ் வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறது என்பதால், நான் அதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமே இல்லை.
கவலைப்பட மாட்டேன்: அப்படித்தான் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணமும் எனக்கும் இல்லை ஆனால், சினிமாவில் சிலர் அதுபோன்று லெஸ்பியனாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அது குறித்து அறிவு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அது சரியான முறையா என்று எனக்கு தெரியவில்லை. பட வாய்ப்பு இல்லை என்றாலும், அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் நான், என் மனசாட்சிக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்படி தான் நடந்து கொள்வேன் என்றார்.
திருமணத்திற்கு நான் ரெடியில்லை: மேலும் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த, ஓவியா, திருமணம் என்பது என் வாழ்க்கையில் தேவைப்படாத ஒன்றாகவே இருக்கிறது. திருமணத்திற்கு நான் தயாராகவும் இல்லை. இனி மேலும் நான் தயாராக மாட்டேன், யாருடனும் ஒத்துப்போய் இணைந்து என்னால் வாழ முடியாது என்று அந்த பேட்டியில் ஓவியா மனம் திறந்து பல விஷயத்தை பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











