ஓவியாவின் உடல் நலம் ஓகே.. பிக் பாஸ் அல்டிமேட் புரமோ ஷூட்டில் கலந்துக் கொண்டாராம்.. மாஸ் தான் போங்க!
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்க ரெடியாவதற்கு காரணமே மீண்டும் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் என்பதற்காகத்தான்.
ஆனால், திடீரென ஓவியா கலந்து கொள்ளப் போவதில்லை என வெளியான தகவல்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அப்செட் ஆக்கியது.
மற்ற சீசன்களில் பிற போட்டியாளர்களுக்கு ஆர்மி அமைத்த பலரும் முதல் சீசனில் ஓவியாவுக்கு ஆர்மி அமைத்தவர்களாத்தான் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம் ஆரம்பம்
ஜூலை 16ம் தேதி தான் பிக் பாஸ் 5வது சீசன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், மீண்டும் ரசிகர்களுக்கு பிக் பாஸ் ட்ரீட்டை கொடுக்க அடுத்த வாரமே அதாவது ஜூலை 30ம் தேதி முதல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. அதுவும் ரசிகர்களின் ஃபேவரைட் போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்ளப் போகின்றனர்.

ஓவியா வராங்க
இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து நடிகை ஓவியா, சினேகன், சுஜா வருணி, பரணி, ஜூலி உள்ளிட்ட போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர் என்கிற தகவல் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஓவியாவின் க்யுட்னஸை கண்டு ரசிக்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர்.

ஓவியாவுக்கு என்ன ஆச்சு
ஆனால், திடீரென நடிகை ஓவியாவுக்கு உடல் நலம் சரியில்லை என்றும் அவர் கலந்து கொள்வது சந்தேகம் என்றும் கிளம்பிய வதந்திகளால் ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர். பலர் ஓவியா வரலைன்னா பிக் பாஸ் அல்டிமேட் பக்கம் தலை வைத்தே படுக்க மாட்டோம் என அதிரடியாக அறிவித்து விட்டனர்.

சம்பள பிரச்சனை
மேலும், சிலர் சம்பள பிரச்சனை காரணமாக நடிகை ஓவியா கடைசி நேரத்தில் ஓகே சொல்லவில்லை என்கிற ரூமர்களையும் சமூக வலைதளங்களில் கிளப்பி விட்டு வந்தனர். ஓவியா நிகழ்ச்சியில் வைல்டு கார்டாக கலந்து கொள்வார் என்றும் வதந்திகள் பரவின. ஆனால், அவை அனைத்துக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது உறுதியான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.

ஓவியா கம்மிங் ஒத்து
நடிகை ஓவியாவுக்கு கொரோனா வந்ததாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. பிக் பாஸ் போட்டியாளர் பாவனிக்கு கொரோனா தொற்று என அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இந்நிலையில், நடிகை ஓவியாவின் உடல் நலம் சரியாகி அவர் இன்று நடைபெற்ற பிக் பாஸ் அல்டிமேட் புரமோ ஷூட்டிங்கில் கலந்து கொண்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிபி வரல
பிக் பாஸ் தமிழ் 5வது சீசனில் இருந்து பாவனி, சிபி, தாமரை, அபிநய் எல்லாம் வரப் போறாங்க என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், பாவனி மற்றும் சிபி வரப் போவது இல்லை என்றும் அபிநய், தாமரை மற்றும் சுருதி 5வது சீசனில் இருந்து பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு வரப் போகின்றனர் எனக் கூறப்படுகிறது. இந்த வீட்டிலேயே ஹேப்பியா இருக்காங்க போல!


Click it and Unblock the Notifications











