ஷட்டப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: மறக்க முடியாத ஓவியா

By Siva

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஓவியா பேசிய சில வார்த்தைகள் மிகவும் பிரபலமாகின.

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு அவரின் மார்க்கெட் எகிறிவிட்டது.

இருப்பினும் தன்னை தேடி வரும் அனைத்து பட வாய்ப்புகளையும் அவர் ஏற்பது இல்லை. பிடித்தவற்றில் மட்டுமே நடிக்கிறார்.

ஓவியா

ஓவியா

ஓவியா இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிக் பாஸால் அவருக்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து பல முன்னணி நடிகைகளே மிரண்டு போனார்கள்.

ட்விட்டர்

ட்விட்டர்

ட்விட்டரில் ஓவியா ஆர்மி என்ற பெயரில் ஒன்றை துவங்கினார்கள் அவரின் ரசிகர்கள். ஒரு நடிகைக்கு ட்விட்டரில் ஆர்மி துவங்கி அது இன்று வரை வெற்றிகரமாக உள்ளது என்றால் அது ஓவியாவுக்கு மட்டும் தான்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் ஓவியா கூறிய ஷட்டப் பண்ணுங்க என்ற வாசகம் மிகவும் பிரபலமானது. டிசர்ட்டில் எல்லாம் ஷட்டப் பண்ணுங்க என்ற வாசகம் இடம்பெற்றது.

வாழைப்பழம்

வாழைப்பழம்

ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் ஒரே சிரிப்பா இருக்கு சார், பசிக்குது ஒரேயொரு வாழைப்பழம் கொடுங்க என்று ஓவியா பிக் பாஸ் வீட்டில் பேசிய வசனங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அந்த வசனங்கள் எல்லாம் இன்று வரை மீம்ஸ்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உண்மை

உண்மை

ஓவியா மனதில் பட்டதை பேசியது தான் ரசிகர்களை கவர்ந்தது. அவர் நடிக்காமல் அவராகவே இருந்ததால் கொண்டாடுகிறோம் என்றார்கள் ரசிகர்கள். பிக் பாஸ் ஸ்க்ரிப்ட்படி நடந்தபோதிலும் ஓவியா மட்டும் நடிக்கவில்லை என்று அவரது ஆர்மிக்காரர்கள் தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X