"ஷூட்டிங்குக்கு தான் லேட்.. இப்ப பங்ஷனுக்குமா".. மேடையில் ஓவியாவை அசிங்கப்படுத்திய ரோபோ சங்கர்!

படப்பிடிப்புக்கு மட்டுமல்லாது அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஓவியா லேட்டாக தான் வருகிறார் என நடிகர் ரோபோ சங்கர் கூறியுள்ளார்.

சென்னை: நடிகை ஓவியா எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தாமதமாக தான் வருகிறார் என நடிகர் ரோபோ சங்கர் கூறினார்.

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடித்த களவாணி 2 திரைப்படம் ஜூலை 5ம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையொட்டி களவாணி 2 படத்தின் நன்றி அறிவிப்பு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் விமல், சற்குணம், துரை சுதாகர் உள்பட படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நன்றி அறிவிப்பு விழா

நன்றி அறிவிப்பு விழா

படத்தில் பணியாற்றவில்லை என்றாலும், நட்பு ரீதியாக நடிகர் ரோபோ சங்கர் விழாவில் கலந்துகொண்டார். இந்த விழா மாலை 6.30 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 7 மணிக்கு எல்லாம் விமல் உள்ளிட்ட படக்குழுவை சேர்ந்த அனைவரும் வந்துவிட்டனர்.

ஓவியா வரவில்லை

ஓவியா வரவில்லை

ஆனால் ஓவியா மட்டும் வரவில்லை. அவருக்கு ஏழேமுக்கால் மணி வரை அனைவரும் காத்திருந்தனர். இதையடுத்து அவர் வரும் போது வரட்டும் எனக்கூறி விழாவை தொடங்கினர். இயக்குனர் சற்குணம், துரை சுதாகர், விமல் உள்பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருமே பேசி முடித்துவிட்டனர். அப்போதும் ஓவியா வரவில்லை.

நேரத்தை கழிப்பதற்காக...

நேரத்தை கழிப்பதற்காக...

நேரத்தை கழிப்பதற்காக செய்தியாளர்களிடம் கேள்வி கேட்கும்படி கேட்டுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து கேள்வி பதில் பகுதி 10 நிமிடங்கள் வரை நடந்தது. மணி அப்போதே இரவு 8.30க்கு மேல் ஆகிவிட்டது.

பொறுமையிழந்த ரோபோ சங்கர்

பொறுமையிழந்த ரோபோ சங்கர்

நிகழ்ச்சியை ரோபோ சங்கர் தான் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். பொறுமையிழந்த அவர், "ஓவியா ஷூட்டிங்குக்கு தான் லேட்டா வருவாங்கான்னு தெரியும். விழாவுக்கு இப்படி வந்தா எப்படி?. என்னப்பா அவங்க வராங்களா இல்லையா", என மைக்கிலேயே கேட்டார்.

நிகழ்ச்சியை முடித்தனர்

நிகழ்ச்சியை முடித்தனர்

அருகில் இருந்த நடிகர் வெங்கட் "அவர் எப்போதுமே அப்படி தானே" எனக் கூறினார். இதையடுத்து விமல் தலையிட்டு இப்போதைக்கு இந்த விழாவை நிறைவு செய்துவிடுவோம். ஓவியா வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றார். 8.45 மணி அளவில் நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு வந்த ஓவியா, சம்பிரதாயத்துக்கு ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு கிளம்பிட்டார்.

திட்டமிட்டு செய்யவில்லை

திட்டமிட்டு செய்யவில்லை

நடிகை ஓவியா படப்பிடிப்பு தளத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வர மாட்டார் எனும் செய்தி ஏற்கனவே அரசல்புரசலாக பேசப்பட்டு வந்தது தான். ஆனால் அதனை ஒரு நிகழ்ச்சியின் போது மேடையிலேயே ரோபோ சங்கர் போட்டுடைப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் திட்டமிட்டு இதனை செய்யவில்லை என்றாலும், ஓவியாவை அசிங்கப்படுத்தியது இல்லை என்றாகிவிடுமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X