Don't Miss!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- News பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை! சென்னை ஹைகோர்ட் அதிரடி! சரணடைகிறாரா ராஜேஷ் தாஸ்?
- Finance Adani: விதிமுறைகளை மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மீண்டும் சின்னத்திரைக்கு வரும் ஓவியா.. போட்டியாளராக அல்ல.. நடுவராக!
கலர்ஸ் டிவி நிகழ்ச்சியில் நடுவராகி இருக்கிறார் ஓவியா.
Recommended Video
சென்னை: நடிகை ஓவியா கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்க இருக்கிறார்.
களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், ஆரவுடன் கொண்ட காதல் பிரச்சினையால் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
டைட்டில் வின்னராக வருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா பாதியிலேயே விலகினாலும், அவருக்கென ஆர்மி ஆரம்பித்தனர் அவரது ரசிகர்கள். இன்றளவும் ஓவியாவிற்கான புகழ் தொடர்ந்து வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பார் எனத் தகவல்கள் வெளியானது. ஆனால், முதல் சீசன் முடிந்து, இரண்டாவது சீசன் ஆரம்பித்து, தற்போது அதுவும் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆனபோதும் ஓவியா நடித்த ஒரு சில விளம்பரப் படங்களைத் தவிர வேறு எந்த அவருடைய திரைப்படங்களும் ரிலீசாகவில்லை.
இதனால் மீண்டும் அவர் சின்னத்திரைக்கே திரும்பியுள்ளார். இம்முறை போட்டியாளராக இல்லாமல், நடுவராக களமிறங்குகிறார் ஓவியா. கலர்ஸ் சேனலில் இம்மாதம் 24ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள டான்ஸ் வெஸ் டான்ஸ் நடன நிகழ்ச்சி தான் அது.
இது வரை தமிழ் சின்னத்திரை கண்டிராத பிரம்மாண்டம்.. - DANCE VS DANCE#DancevsDance மாபெரும் நடன நிகழ்ச்சி வரும் நவம்பர் 24 முதல் உங்கள் கலர்ஸ் தமிழில்.. #BrindaMaster @Nakkhul_Jaidev @OviyaaSweetz @KikiVijay @MirchiRJVJ pic.twitter.com/oWnDehp2Aw
— Colors Tamil (@ColorsTvTamil) November 16, 2018
இந்த நிகழ்ச்சிக்கு நடன இயக்குநர் பிருந்தா ஒரு நடுவராகவும், நடிகர் நகுல் மற்றொரு நடுவராகவும் உள்ளனர். மூன்றாவது நடுவரை இதுவரை சஸ்பென்ஸாக வைத்திருந்த சேனல், தற்போது அது ஓவியா தான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த நிகழ்ச்சி வருகிற 24ம் தேதி முதல் கலர்ஸ் சேனலில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஒவ்வொரு சேனலிலுமே வெவ்வேறு பெயர்களில் டான்ஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும் சூழ்நிலையில், ஓவியா பங்கேற்பதால் நிச்சயம் இந்த டான்ஸ் வெஸ் டான்ஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.