காதல், ரிலேஷன்ஷிப், ஆரவுடன் படம், பிடித்த ஹீரோ: பளிச்சென்று பதில் சொன்ன ஓவியா #AskOviyasweetz
Recommended Video

சென்னை: ஓவியா ட்விட்டரில் தனது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
ஓவியாவுடன் ட்விட்டரில் சாட் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினர். இதையடுத்து ஓவியா நேற்று இரவு தனது ரசிகர்கள் ட்விட்டரில் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
சில கேள்விகளுக்கு வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார்.
தனுஷ்
சிம்பு, தனுஷ் ஆகிய இருவரில் யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கு, ஓவியா கூறியதாவது, ஒரு மனிதனாக சிம்புவையும், நடிகனாக தனுஷையும் பிடிக்கும் என்றார்.
மெசேஜ்
உங்களின் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று ஒருவர் கேட்டார். அதற்கு எனக்கு சிறந்த ரசிகர்கள் கிடைத்துள்ளார்கள். நன்றி என்று கூறி பறக்கும் முத்தம் கொடுத்தார் ஓவியா.
நடிப்பு
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா ஆரவை காதலித்து சோர்ந்து போனது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ஆரவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு ஆமாம், நடிப்பேன் என்று ஓவியா தெரிவித்துள்ளார்.
இதயங்கள்
பிக் பாஸ் டைட்டிலை வெல்ல முடியவில்லை என்று வருத்தப்பட்டதுண்டா என்று கேள்வி கேட்கப்பட்டது. இல்லவே இல்லை, நான் பல லட்சம் இதயங்களை வென்றுள்ளேன். அதுவே போதும் என்று பதில் அளித்துள்ளார் ஓவியா.
ஓவியா
உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று ஓவியாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் என் தந்தை என்று தெரிவித்துள்ளார்.
யார்?
யாரையாவது காதலிக்கிறீர்களா என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு ஓவியாவோ, நான் எப்பவுமே காதலித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை என்றார்.
புதிய படம்
காஞ்சனா 3 படத்திற்கு பிறகு பெண்களை மையமாக கொண்ட படத்தில் நடிக்கிறேன். அது குறித்த விபரங்களை விரைவில் தெரிவிப்பேன் என்று புதிய படம் குறித்து எழுந்த கேள்விக்கு ஓவியா பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











