அஜித் பாட்டுக்கு ஆடும் ஓவியா... ஓவியா ஆர்மியும், அஜித் ஃபேன்ஸும் டபுள் ஹேப்பி!
Recommended Video

சென்னை : நடிகை ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபிறகு அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் பெருகியிருக்கிறார்கள்.
தனது பாஸிட்டிவ் மற்றும் தனித்துவமான அப்ரோச்களால் அனைவரின் மனதைக் கவர்ந்த ஓவியாவுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், ஓவியா தனது ரசிகர்களுடன் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
ட்விட்டரில் வைரலாகி வரும் ஓவியாவின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோவை ஓவியா ஆர்மி ரசிகர் படையினர் மற்றும் அஜித் - ஷாலினி ரசிகர்கள் வெறித்தனமாக ரீ-ட்வீட் செய்து வருகிறார்கள்.

உன்னோடு வாழாத...
அஜித் மற்றும் ஷாலினியின் திரைப் பயணத்தில் மிக முக்கியமான படமான 'அமர்க்களம்' படத்தில் இடம்பெற்ற 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு... என் உள்நெஞ்சு சொல்கின்றதே...' பாடலுக்குத்தான் ரசிகர்களோடு ஆடியிருக்கிறார் ஓவியா.

அஜித் - ஷாலினி காதல்
'அமர்க்களம்' படத்தில் நடித்தபோதுதான் அஜித் - ஷாலினி காதல் பரபரப்பாகப் பேசப்பட்டது. சினிமா உலகில் ரோல் மாடல் ஜோடியாக வலம் வரும் அஜித் ஷாலினிக்கு அமர்க்களம் படம் ரொம்பவே ஸ்பெஷல்.

ஓவியா டான்ஸ்
பிக்பாஸ் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஓவியா, 'உன்னோடு வாழாத...' பாடலுக்கு செமையாக ஆடி அஜித் ரசிகர்களின் ஆதர்ச நடிகையாகி இருக்கிறார். இதனால், ஓவியா ஆர்மி ரசிகர் படையினருக்கும் கொண்டாட்டம்தான்.


Click it and Unblock the Notifications











