‘அள்ளிக்கொள்ளவா’... இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' படப் பாடல்!
ஓவியா படப்பாடலுக்காக இலங்கை அரசின் தேசிய விருதைப் பெற்றுள்ளார் இசையமைப்பாளர் சிவா பத்மஜன்.
Recommended Video

சென்னை: ஓவியா' எனும் படத்தில் இடம்பெற்ற அள்ளிக்கொள்ளவா படப்பாடலுக்காக இலங்கை அரசின் சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருதைப் பெற்றுள்ளார் சிவா பத்மஜன்.
இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்துள்ள படம் 'ஓவியா'. அறிமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சிவா பத்மஜன் இசையமைத்துள்ளார்.

காண்டீபன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், நாயகியாக இலங்கையைச் சேர்ந்த மிதுனா நடித்துள்ளார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ' ஓவியா'வாக நடித்திருக்கிறார்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள, 'அள்ளிக் கொள்ளவா' பாடலுக்காக, இலங்கை அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை சிவா பத்மஜன் பெற்றுள்ளார். விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் டைட்டில் வின்னரான ஆனந்த் அரவிந்தக்ஷன் இந்த பாடலை பாடியுள்ளார்.

கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில், கலைத்துறை அமைச்சர் எஸ்.பி.நவய்நெ (S.B.Nawwine) இந்த விருதை சிவா பத்மஜனுக்கு வழங்கினார்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கு நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











