விஜய்ஸ்ரீ இயக்கத்தில் ஹீரோவாகும் ஆரவ்.. ஜோடி யார்னு கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க ஓவியா ஆர்மி!

ஆரவ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் ஓவியா நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சென்னை: தாதா 87 பட இயக்குநரின் அடுத்த படத்தில் ஆரவுக்கு ஜோடியாக ஓவியா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டவர் ஆரவ். இவர் தன்னுடைய சக போட்டியாளரான ஓவியாவை முதலில் காதலிப்பது போலவும், பின்னர் இல்லையென்றும் சொல்லியதால் பிக் பாஸ் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. ஓவியாவிற்கு ஆரவ் தந்த முத்தம் 'மருத்துவ முத்தம்' எனப் பிரபலமானது.

இந்தக் காதலால் பாதியிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஓவியா. அதனைத் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

முதல் படம்:

முதல் படம்:

இந்நிலையில், விஜய்ஸ்ரீ இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகன் ஆகிறார் ஆரவ். இதற்கு முன்னர் சைத்தான் உள்ளிட்ட சில படங்களில் ஆரவ் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். ஆனால், அவர் நாயகனாக அறிமுகம் முதல் படம் இது தான்.

ஆரவ் ஜோடியாக ஓவியா:

ஆரவ் ஜோடியாக ஓவியா:

இந்தப் படத்தில் ஆரவிற்கு ஜோடியாக ஓவியா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இயக்குநர் விஜய்ஸ்ரீயை தொடர்பு கொண்டால், ‘நாயகியை இன்னமும் ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால் 200 சதவீதம் அவர் கேரளாவைச் சேர்ந்தவர் தான்' எனப் பட்டும் படாமல் சொல்லிச் சிரிக்கிறார்.

ரசிகர்கள்:

ரசிகர்கள்:

இயக்குநரின் இந்தச் சிரிப்பின் மூலமே ஆரவின் ஜோடியாக ஓவியா தான் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் ஓவியாவின் நேர்மையான நடவடிக்கைகளால் கவரப்பட்டு, அவருக்கென ஆர்மி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

வைரல் டயலாக்:

வைரல் டயலாக்:

அதோடு, பிக் பாஸ் வீட்டில் ஓவியா பேசிய ‘நீங்க ஷெட் அப் பண்ணுங்க, ஸ்பிரே அடிச்சுப் புடுவேன் பார்த்துக்க, கொக்கு நெட்டக் கொக்கு பாடல்' போன்றவை இன்றளவும் வைரலாக உள்ளது. அந்தவகையில் ஆரவ்- ஓவியா நடிக்கும் புதிய படத்திற்கு மருத்துவ முத்தம் எனப் பெயர் வைத்தால் கூட ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

தாதா 87:

தாதா 87:

வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி இப்புதிய படத்தின் தலைப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இயக்குநர் விஜய்ஸ்ரீ தற்போது சாருஹாசன் நடித்த 'தாதா 87' என்கிற படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X