'உன்னை மட்டும் சுத்த வச்சியே...' - ஓவியாவைச் சுற்றி வந்த சரத்குமார்!

By Shankar

மாசாணி படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்தார் இனியா. அந்த வகையில் இப்போது சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் இளம் நாயகி ஓவியா.

சென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் சண்டமாருதம் என்ற படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீரா நந்தன் இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார்.

ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார்

இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத, திரைக்கதை எழுதுகிறார் எழுத்தாளர் ராஜேஷ் குமார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார்.

சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கின்றனர். வசனம் எழுதி இயக்குகிறார் ஏ வெங்கடேஷ் .

சரத் - ஓவியா டூயட்

சரத் - ஓவியா டூயட்

இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. சமீபத்தில் சரத்குமார் - ஓவியா பங்கேற்ற

உன்னை மட்டும் சுத்த வச்சியே - உன்
பேர கத்த வச்சியே
எனக்குள்ளே பேச வச்சியே
உனை மொத்தம் வாங்க வச்சியே...

என்ற பாடல் காட்சி பாங்காக்கில் படமாகப் பட்டது. இந்த பாடல் காட்சியை பிரபல இந்திப் பட டான்ஸ்மாஸ்டரான விஷ்ணு தேவா நடனம் அமைக்கப் படமாக்கப்பட்டது

ஏ வெங்கடேஷ்

ஏ வெங்கடேஷ்

சண்டமாருதம் படத்தை பற்றி இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறுகையில், 'இது கமர்ஷியல் படம். நல்ல கதைக் களம். திறமையான கதாநாயகன் மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகள். சின்சியரான தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டு முயற்சியால் 'சண்டமாருதம்' பேசப்படும் படமாக இருக்கும்,' என்றார்.

சரத்குமார்

சரத்குமார்

ஓவியாவுடன் நடிப்பது குறித்து சரத்குமார் கூறுகையில், "இளம் வயது ஹீரோயின் என்பதெல்லாம் எனக்கு பிரச்சினையில்லை. காரணம் நான் இன்னும் மனதளவில் 25வயதைத் தாண்டாதவன்தான். அதனால் ஓவியா மாதிரி நாயகிகளுடன் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X