நடிகை ஓவியா வெளியிட்ட முத்த போட்டோ.. 'இவர் உங்களுக்கு சரிபட்டு வரமாட்டார்.. எச்சரிக்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: நடிகை ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல வெளியிட்டுள்ள புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.

களவாணி படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை ஓவியா.

அதற்கு முன், வினயன் இயக்கிய, நாளை நமதே என்ற படத்தில் நடித்திருந்தார்.

களவாணி 2

களவாணி 2

பிறகு மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, சுந்தர் சியின் கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர் கூடம் உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடினார். கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் ஓவியா, கடைசியாக களவாணி 2 படத்தில் நடித்திருந்தார்.

ஓவியா ஆர்மி

ஓவியா ஆர்மி

பிக்பாஸ் ஆரவ்வுடன் ராஜபீமா உட்பட சில படங்களில் நடித்திருக்கும் ஓவியா, விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். மற்றப் போட்டியாளர்களை விட, அவருக்கு மட்டும் பேராதரவு. அவருக்காகத் தொடங்கப்பட்ட 'ஓவியா ஆர்மி' இன்றும் செயல்பட்டு வருகிறது.

ஆரவ் திருமணம்

ஆரவ் திருமணம்

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா, ஆரவ்வை அப்போது காதலித்ததாகக் கூறப்பட்டது. பின்னர் அவர்கள் பிரிந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரவ், நடிகை ராஹியை திருமணம் செய்துகொண்டார். அவர்களை வாழ்த்துவதாக, நடிகை ஓவியா கூறியிருந்தார்.

நெற்றியில் முத்தம்

நெற்றியில் முத்தம்

இந்நிலையில், ஒருவருக்கு நெற்றியில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஓவியா, லவ் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ் சரமாரியாக கருத்து தெரிவித்துள்ளனர். 'இவரையா நீங்க லவ் பண்றீங்க? இந்த காதலாவது ஒர்க் அவுட் ஆகட்டும்' சிலர் கூறியுள்ளனர்.

சரிபட்டு வரமாட்டார்

சரிபட்டு வரமாட்டார்

இன்னும் சிலர் அவரை கடுமையாகக் கலாய்த்துள்ளனர். இதையடுத்து ஒருவர், ஓவியாவுடன் இருக்கும் நபர், நடிகை மீரா மிதுனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, ஓவியா இவர்ட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க. இவர் உங்களுக்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X