Oviya in Bigg Boss Tamil 7: பிக் பாஸ் சீசன் 7க்கு போறேன்.. ஓபனா சொன்ன ஓவியா.. ரசிகர்கள் ஹேப்பி!

சென்னை: நடிகை ஓவியா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குப் போக போகிறேன் என சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தெரிவித்து ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி வெளிநாடுகளில் களைகட்டிய நிலையில், இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பல முன்னணி நடிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

Oviya reveals that she will come to Bigg Boss Tamil Season 7

சினிமா நடிகர்கள் முதல் சின்னத்திரை நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ் நாட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் கடந்த 6 சீசன்களாக தொகுத்து வழங்கிய நிலையில், 7வது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார்.

முதல் ஆர்மியே ஓவியாவுக்குத்தான்: பிக் பாஸ் தமிழ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஓவியாவுக்குத்தான் தமிழ்நாட்டில் முதன்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆர்மி அமைக்கப்பட்டது.

ஓவியாவின் யதார்த்தமான கேரக்டர் தான் ரசிகர்களை சட்டென அவரை பிடிக்க வைத்தது. களவாணி, மதயானைக் கூட்டம் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்ததை விட அதிகளவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொண்ட நிலையில், பெரும் பிரபலமானார்.

பிக் பாஸ் சீசன் 7க்கு வரேன்: பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி வரை ஓவியா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவே இல்லை. கடைசியாக வைல்டு கார்டு என்ட்ரியாக ரம்யா பாண்டியன் வந்திருந்தார்.

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7ன் துவக்க விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஓவியா வரப்போவதாக சமீபத்தில் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார். விஜய் டிவி தன்னை அழைத்துள்ளனர். ஆனால், இன்னமும் அதற்கு போவதா? அல்லது வேண்டாமா? என்கிற முடிவை எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

Oviya reveals that she will come to Bigg Boss Tamil Season 7

கெஞ்சும் ரசிகர்கள்: ஓவியா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரப் போவதாக அவரே சொல்லியுள்ள நிலையில், தலைவி தயவு செஞ்சு வாங்க, வந்து ஒரு வாரமாவது வீட்டில் இருந்து விட்டு போங்க என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கெஞ்சி வருகின்றனர்.

விரைவில் ஓவியா நடித்த சிவிங்கம் வெப்சீரிஸ் வெளியாகப் போகிறது. அதில், ஆர்ஜேவாக நடித்துள்ளேன் என்றும் ஓவியா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X