பெண்களின் பெருமைப் பேசும் ஓவியாவின் பதிவு… மறைமுகமாக மீடூவிற்கு ஆதரவா?
சென்னை: நடிகை ஓவியா பெண்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.
பல படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தபிறகே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார் ஓவியா. அதனால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது ட்விட்டரில் பல விஷயங்களைப் பகிரும் ஓவியா, பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக, புக்கர் விருது மற்றும் நோபல் பரிசு பெற்ற ஆங்கில கவிஞர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங்கின் வாசகத்தை பகிர்ந்துள்ளார்.
"ஆண்களுக்கு நிகரானவர்களாக பெண்கள் தங்களைக் காட்டிக்கொள்வதாக நினைத்து முட்டாளாக இருக்கிறார்கள். அவர்கள் மிகச் சக்திவாய்ந்தவர்களாக எப்போதும் இருக்கிறார்கள். பெண்களிடம் எதை கொடுத்தாலும் அதை சிறப்பாக மாற்றக்கூடியவர்கள்.
அவளிடம் உயிரணுவைக் கொடுத்தால் அதை அவள் குழந்தையாகக் கொடுப்பாள். அவளுக்கு ஒரு வீடு கொடுத்தால் அவள் சிறந்த இல்லத்தை தருவாள். மளிகைப் பொருட்களை கொடுத்தால் உங்களுக்கு சாப்பாடு தருவாள். நீங்கள் புன்னகையை கொடுத்தால் அவள் இதயத்தை தருவாள். அவளிடம் எதைக் கொடுத்தாலும் அதை பன்மடங்காக்கி திரும்பித் தருவாள். அதனால் அவளுக்கு மோசமாக ஏதாவது செய்தால் அதனால் ஏற்படும் பன்மடங்கு விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்".
இதுதான் அந்த மெசேஜ். பொதுவாக தம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் பிரதிபலிக்கும். அந்த வகையில், மீடூ விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், எதையோ சூசகமாக சொல்வதற்காக இந்த பதிவை ஓவியா போட்டிருக்கிறாரா என கேள்வி எழுகிறது.
அடுத்ததாக ஓவியா நடிப்பில் 90 எம்.எல் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இப்படத்தை அனிதா இயக்கியுள்ளார், சிம்பு இசையமைத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து சற்குணம் இயக்கத்தில் விமல் ஓவியா நடிப்பில் களவாணி 2 ரிலீஸாக உள்ளது.


Click it and Unblock the Notifications











