ஓவியாவின் ‘மெர்லின்’ வெப்சீரிஸ்… யூடியூபில் நாளை ரிலீஸ் !
சென்னை : பிக் பாஸ் புகழ் நடிகை ஓவியா முதன் முறையாக வெப்சீரிஸில் நடித்துள்ளார்.
மெரிலின் என்று இந்த சீரிஸூக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது
இந்த வெப் தொடர். ஜூன் 5ந் தேதி யூடியூபில் வெளியாக உள்ளதாக ஓவியாவின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

அறிமுகம்
மலையாள நடிகையான ஓவியா விமலுடன் களவாணி திரைபடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக போன்ற படங்களில் நடித்திருந்தார்.

சிறப்பாக
சிவகார்த்திகேயனுன் மெரினா, கலகலப்பு போன்ற படங்களில் நடித்து வந்தார் பட வாய்ப்புகள் வந்தாலும், முன்னணி நடிகை என பெயர் சொல்லும் படி எந்த திரைப்படங்களும் இவருக்கு அமையவில்லை. இருப்பினும் கிடைத்த படங்களில் சிறப்பாக நடித்து வந்தார்.
Recommended Video

ஓவியா ஆர்மி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் அவரது ரேஞ்ஜ் வேறலெவலில் எகிறியது. கள்ளம் கபடமில்லாத இவரின் சிரிப்பு மக்களுக்கு பிடித்துப்போக ஓவியா ஆர்மி ஆரம்பிக்கு அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் உருவாகினார்கள். ஆரவுடன் மருத்துவ முத்த விவகாரத்தில் சிக்கி, தானாக பிக் பாஸ் வீட்டிலிருந்து ஓவியா வெளியேறினார்.
மெர்லின்
இந்நிலையில் நடிகை ஓவியா முதல் முறையாக வெப் சீரிஸில் நடித்துள்ளார். அந்த தொடருக்கு மெர்லின் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 5ந் தேதி இந்த வெப் சீரிஸ் யூடியூபில் வெளியாக உள்ளதான நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை ஓவியாவின் ரசிகர்கள் மிகுந்த ஆவலாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











