»   »  விஜய் படத்தில் நடிக்க மறுத்த ஓவியா... அந்த வாய்ப்பு யாருக்கு போயிருக்கு தெரியுமா?

விஜய் படத்தில் நடிக்க மறுத்த ஓவியா... அந்த வாய்ப்பு யாருக்கு போயிருக்கு தெரியுமா?

By Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

சென்னை : விஜய் மூன்றாவது முறையாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் 'விஜய் 62' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஹீரோயின் வேடத்தில் மட்டுமே நடிக்க விரும்புவதாகக் கூறி மறுத்திருக்கிறார் ஓவியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்குப் பின், அவர் நடித்த ஒரு படம் கூட இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் ஓவியா

பிக்பாஸ் ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சக போட்டியாளர்கள் ஓவியாவை டார்ச்சர் செய்தும், தனது தனித்துவமான குணத்தால் மக்களின் அனுதாபத்தைப்பெற்றார் ஓவியா. அதுவே அவருக்கு ஆதரவு அலையை ஏற்படுத்தியது.

குவிந்த வாய்ப்புகள்

குவிந்த வாய்ப்புகள்

இந்த வரவேற்பை வைத்து ஓவியாவைப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. அவற்றில் சம்பளத்தை உயர்த்தி பல படங்களை நிராகரித்த ஓவியா கடைசியில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக 'காஞ்சனா 3' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

விஜய் 62

விஜய் 62

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க ஓவியாவை அணுகினார்கள். விஜய்யின் 62ஆவது படமாக உருவாக உள்ள இந்தப்படத்தில் 'தீரன்' படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.

நடிச்சா ஹீரோயின்

நடிச்சா ஹீரோயின்

இப்படத்தில் உள்ள முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தன்னிடம் கேட்கப்பட்டது ஹீரோயின் ரோலுக்காக இல்லை என்பதால் நடிக்க மறுத்துவிட்டார் ஓவியா.

ஓவியா இடத்தில் ஜூலியா?

ஓவியா இடத்தில் ஜூலியா?

இப்போது ஓவியா நடிக்க மறுத்த கேரக்டரில் 'பிக்பாஸ்' ஜூலி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் உண்மையானால், இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் ஜூலி.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Vijay is playing 'Vijay 62' for the third time with director AR Murugadoss. Actress Oviya was negotiated to act in the character role. Oviya refuses to say that she wants to act only in the role of the heroine. Now, Biggboss Julie is ready to be acting in that role.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more