ஓவியாவுக்கு ஓவியான்னு பெயர் வச்சது யார் தெரியுமா? மனம் திறந்த தலைவி!
சென்னை: தனக்கு ஓவியா என்று யார் பெயர் வைத்தது என்பது குறித்து நடிகை ஓவியா பேசியுள்ளார்.
களவானி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஓவியா. மன்மதன் அம்பு, புலி வால்இ மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மத யானை கூட்டம், ஹலோ நான் பேய் பேசுறேன், காஞ்சானா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஓவியா.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ஓவியா அவராகவே இருந்தது மற்றும் அவரது கேரக்டர் மக்களுக்கு மிகவும் பிடித்து போக பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. ஓவியாவுக்கு என ரசிகர்கள் தனி ஆர்மியையும் தொடங்கினர்.

பிரஸ் மீட்
இந்நிலையில் களவாணி 2 படத்தில் ஓவியா நடித்துள்ளார். இந்த படத்தின் குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

சந்தோஷமாக உள்ளது
அப்போது பேசிய ஓவியா பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 8 வருடங்களுக்கு முன்பு பார்த்த முகங்களை தற்போது மீண்டும் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது என்றார்.

சற்குணம் சார்தான்
தனக்கு ஓவியா என்று பெயர் வைத்தது சற்குணம் சார்தான் என்றும் ஓவியா கூறினார். ஓவியாவின் இயற் பெயர் ஹெலன் நெல்சன் ஆகும். படத்தில் ஃபன் மற்றும் ரொமான்ஸ் இருப்பதாக கூறினார். நிச்சயம் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றும் கூறினார்.

தமிழ் கற்றுக்கொடுத்த விமல்
மேலும் தனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தது விமல்தான் என்றும் தற்போது விமல் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற முடியவில்லை என்றும் கூறினார் ஓவியா. மேலும் இயக்குநர் சற்குணத்திற்கு நன்றியும் கூறினார் ஓவியா.


Click it and Unblock the Notifications











