காதலர் இல்லாத குறை.. தனக்குத் தானே கேக் செய்து பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகை!
சென்னை: நடிகை ஓவியா தனது பிறந்தநாளை முன்னிட்டு பர்த்டே கேக்கை அவரே ஸ்பெஷலாக செய்து கொண்டாடியுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதனால், பிரபலங்கள் தங்களின் பிறந்தநாளைக்கு கூட கேக் வாங்கி அதை வெட்டி கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஹோம் மேட் கேக்
இந்நிலையில், பல பிரபலங்களும் தங்களின் பிறந்த நாளன்று வீட்டிலேயே கேக் செய்து பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அண்மையில் நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கணவரும் டோலிவுட் நடிகருமான நாக சைதன்யா தனது காதல் மனைவிக்கு கேக் செய்தது குறிப்பிடத்தக்கது.

கேக் செய்த ஓவியா
இந்நிலையில், நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஓவியா, லாக்டவுன் காரணமாக வெளியே சென்று கேக் வாங்காமல், வீட்டிலேயே தனக்குத் தானே ஸ்பெஷலாக பர்த்டே கேக் ஒன்றை செய்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த கேக்குடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

செல்லம் லவ் யூ
பாப் கட்டிங்குடன் ரெட் கலர் டாப் உடன் மஞ்சள் நிற கேக்கை கையில் ஏந்தியவாறு நடிகை ஓவியா தனது சமூக வலைதள பக்கத்தில் கேக் புகைப்படத்தை போட்டவுடன் ரசிகர்கள் எனக்கு கேக் என கேட்கத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்த ரசிகர் செல்லம் ஐ லவ் யூ என ஓவியாவுக்கு ரூட் விட, அவரும் பதிலுக்கு லவ் யூ டூ போட்டு ரசிகரை திக்குமுக்காட செய்துள்ளார்.

ஓவியாதான் என் லவ்வர்
காதலர் இல்லாத குறையால் தனக்குத் தானே நடிகை ஓவியா பிறந்த நாள் கேக் செய்து தனது பர்த்டேவை சிம்பிளாக கொண்டாடிய நிலையில், ரசிகர் போட்ட லவ் யூ கமெண்ட்டுக்கு லவ் யூ டூ போட்டு கெத்துக் காட்டினார். உடனே அந்த ரசிகர், இறுதியாக நான் ஓவியாவுடன் காதலில் கமிட் ஆகிவிட்டேன் என மெர்சலாக மீம் போட்டு வைரலாக்கி வருகிறார்.

இதோ வரேன்
இதுல எது கேக் என்றும், கேக்கை பார்க்கவே எச்சில் ஊறுகிறது என்றும், எனக்கு கேக் என்றும் ரசிகர்கள் நடிகை ஓவியாவின் ட்வீட்டுக்கு கீழே எக்கச்சக்கமாக கமெண்ட் செய்து வருகின்றனர். எனக்கு கேக் தர மாட்டீங்களா? என கேட்ட ரசிகர் ஒருவருக்கு, இதோ எடுத்துட்டு வரேன் என குறும்பாகவே ஓவியா பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











