டெய்லி எத்தனை பெக் போடணும்.. பயம்னா என்னன்னு எனக்கு தெரியவே தெரியாது.. ’தக்’ பண்ண ஓவியா!

சென்னை: மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறேன் என்றும் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளேன் என சமீபத்தில் ஓவியா அளித்த பேட்டி ரசிகர்களின் கவனத்தை திருப்பி உள்ளது.

அந்த பேட்டியில் ஃப்ரீயா கொடுத்தா எவ்ளோ வேண்டுமானாலும் சரக்கடிப்பேன் என்றும் டெய்லி எத்தனை பெக் போடணும் என கேட்டு நிகழ்ச்சி தொகுப்பாளரையே திணறவிட்டுள்ளார் ஓவியா.

Oviya shocks everyone with her alcohol drinking statement

மேலும், தனக்கு பயம்னா என்னவென்றே தெரியாது என்றும் Thug Life பதில் சொல்லி தனது ஓவியா ஆர்மியை மீண்டும் ஆக்டிவேட் செய்துள்ளார்.

பயம்னா என்னன்னே தெரியாது: நடிகை ஓவியா எப்போதுமே மனதில் பட்டதை பட்டு பட்டென பேசுபவர் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரை பார்த்த அத்தனை ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கும். எதற்குமே பயப்பட மாட்டேன் என்றும் பயம்னா என்னன்னே தெரியாது என்றும் சமீபத்திய பேட்டியில் பேசிய ஓவியா, அதுதான் எனக்கு பெரிய பிரச்சனையே என்றும் கூறி ரசிகர்களின் கவனத்தை திருப்பி உள்ளார்.

எதுவுமே வொர்க்கவுட் ஆகல: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கப் போகிறார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நினைத்ததை போலவே காஞ்சனா 3 படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த படம் வெளியான பின்னரும் ஓவியாவுக்கு எந்தவொரு வரவேற்பும் கிடைக்காமல் போனது.

Oviya shocks everyone with her alcohol drinking statement

சில ஆண்டுகளாக சினிமா மற்றும் சின்னத்திரை என எதிலுமே தென்படாமல் இருந்து வந்த ஓவியா சீக்கிரமே பிக் பாஸ் சீசன் 7ல் சிறப்பு விருந்தினராக பங்கேற்க போகிறார் என்பது ஓவியா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

எத்தனை பெக் போடணும்: சமீபத்தில் ஓவியா அளித்த பேட்டியில், ஃப்ரீயா உங்களுக்கு சரக்கு கொடுக்கிறாங்கன்னு வச்சிக்கோங்க என்று கற்பனையாக கேள்வி கேட்க, ஒரு நாளைக்கு எத்தனை பெக் போடணும்னு சொல்லுங்க, போட்ருவோம், அதை பத்தியெல்லாம் எனக்கு கவலையே இல்லை என செம ஓபனா பேசி தொகுப்பாளரை மட்டுமின்றி ரசிகர்களையும் திக்குமுக்காட செய்துள்ளார் ஓவியா.

நான் ஒரு ரோபோ: நீங்க மனுஷியா, இல்லை ரோபோவான்னு கேட்க சில நேரங்களில் மனுஷியா இருப்பேன். சில நேரங்களில் ரோபோவாக் கூட மாறிடுவேன் என்றும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X