அந்த இடத்தில் பாம்பு டாட்டூ.. ஆர்மியினருக்கு அதிர்ச்சி அளித்த நடிகை ஓவியா.. வைரலாகும் வீடியோ!

சென்னை: பாம்பு டாட்டூ போட்ட வீடியோவை வெளியிட்டு தனது ஆர்மியினரையே அதிர வைத்துள்ளார் நடிகை ஓவியா.

Recommended Video

Bigg Boss Contestant changeover After Bigg Boss | Oviya, Losliya, Kavin | Filmibeat Tamil

களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக பிரபலமானவர் நடிகை ஓவியா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்தார்.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தேவையா? என்ற கேள்வியை எழுப்பி ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களையும் அப்செட் ஆக்கி இருந்தார்.

இயல்பான நடிகை

இயல்பான நடிகை

மலையாள மொழியில் வெளியான கங்காரு படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஓவியா, தமிழில் நாளை நமதே படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், 2010ம் ஆண்டு இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான களவாணி படம் ஓவியாவிற்கு மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் கொடுத்தது. தனது இயல்பான நடிப்பால் ஏகப்பட்ட படங்களில் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

படங்கள் ஓடவில்லை

படங்கள் ஓடவில்லை

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார் நடிகை ஓவியா. ஆனால், அவர் நடித்த சில படங்களைத் தவிர பல படங்கள் ஓடவே இல்லை. இதனால், கோலிவுட் முதல் மற்ற சினிமா உலகிலும் அவரது மார்க்கெட் சரியத் தொடங்கியது.

ஆர்மி தந்த பிக்பாஸ்

ஆர்மி தந்த பிக்பாஸ்

இந்நிலையில், பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை ஓவியா. ஆங்கிலம், இந்தியில் ஹிட்டான அந்த ஷோ தமிழில் எப்படி வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கமல்ஹாசனின் தொகுப்பு மற்றும் ஓவியாவின் பங்கேற்பால் வேற லெவலில் களைகட்டியது. ஓவியாவுக்கு புதுசா ரசிகர் ஆர்மியே உருவானது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட நடிகை ஓவியாவின் புகழ் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவதை பார்த்த நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள், ஓவியாவுக்கு பைத்தியக்காரி டாஸ்க் கொடுத்து, தற்கொலை முயற்சி செய்தபடி திடீரென வெளியேற்றப்பட்டார். டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்த்த ஓவியா வெளியேறியது ரசிகர்களை மிகவும் வருத்தமடையச் செய்தது.

பிக்பாஸ் தேவையா?

பிக்பாஸ் தேவையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை வைத்து மறுபடியும் பல படங்களில் நடித்தார் நடிகை ஓவியா. ஆனால், ஒரு படமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. காஞ்சனா 3 கூட விமர்சன ரீதியாக சரியான அடி வாங்கியது. இந்நிலையில், சமீபத்தில் பிக்பாஸ் தேவையா? என்றும் போட்டியாளர்களை ஃபோர்ஸ் பண்ணுகிறார்கள் என்றும் தொடர்ச்சியாக பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார் ஓவியா.

பாம்பு டாட்டூ

பாம்பு டாட்டூ

அதன் பிறகு, கொஞ்ச நாள் சமூக வலைதளத்திற்கு வராமல் இருந்த நடிகை ஓவியா, இப்போ தனது காலில் பாம்பு டாட்டூ போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். நடிகை ஓவியாவின் ஒரு காலை பாம்பு ஒன்று சுற்றி இருப்பது போல இருக்கும் அந்த டாட்டூ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஆரவ் திருமணம்

ஆரவ் திருமணம்

சமீபத்தில் பிக்பாஸ் பிரபலம் மற்றும் நடிகர் ஆரவ், ராஹி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியாவும் ஆரவ்வும் காதலித்து வந்த நிலையில், ஆரவ்வின் கல்யாணம் ஓவியாவை மனதளவில் பாதித்துள்ளதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். "உங்க காலை சுத்துன பாம்பு வேற பொண்ணை தேடி போயிடுச்சே" என நக்கல் அடித்து கமெண்ட்டுகளும் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X