கடவுளே அஜித்தே இல்லை.. இனிமே கடவுளே ஓவியா தான்.. அந்த கிரிக்கெட் வீரருக்கு ஜோடியா?

சென்னை: நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ என சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வைரலான வீடியோவை பார்த்து பலரும் ஷாக்கான நிலையில், ஓவியா தக் லைஃப் பதில் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தன்னை ஏமாற்றிய காதலன் ஷேர் செய்த டீப் ஃபேக் வீடியோ என்றும் ஓவியா தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கவின், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட நடிகர்கள் சூப்பரான ஹீரோக்களாக வலம் வரும் நிலையில், ஓவியா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், லாஸ்லியா, ஷிவானி எல்லாம் பெருசா ஷைன் ஆகவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமே உள்ளன.

oviya harbhajan singh

காஞ்சனா 3 வாய்ப்பு கிடைத்தவுடனே ஓவியாவின் மார்க்கெட் உயரும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த படமே சொதப்பிவிட்டது தான் சோகத்திலும் சோகம். இந்நிலையில், தற்போது பேய் படமெல்லாம் வேண்டாம் அம்மனாக மாறினால் தான் இங்கே மதிப்பார்கள் என கடவுளாகவே மாறிவிட்டார் ஓவியா.

ஆபாச வீடியோ சர்ச்சை: நடிகை ஓவியா தனது காதலருடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் இந்தியளவில் டிரெண்டானது. டீப் ஃபேக் வீடியோ தான் அது என்று பலரும் சொன்ன நிலையில், ஓவியா அதற்கு வெளிப்படையாக இன்ஸ்டாகிராமில் மறுப்பு சொல்லாமல் என்ஜாய் பண்ணுங்க என போட்ட கமெண்ட் காரணமாக மேலும் அந்த வீடியோ டிரெண்டானது. அதன் பின்னர் தான் இது தொடர்பாக கேரளாவில் ஓவியா புகார் ஒன்றை கொடுத்தார் என தகவல்கள் வெளியாகின.

அம்மனாக ஓவியா: ஆபாச வீடியோ சர்ச்சை வெடித்த நிலையில், அதிலிருந்து ரசிகர்களை அப்படியே திசை திருப்ப தற்போது நடிகை ஓவியா அம்மனாக நடித்து வருவதை அறிவிக்கும் விதமாக சேவியர் எனும் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். காளி அம்மன் போல பல கைகளுடன் ஓவியா இருக்கும் போஸ்டரை பார்த்து ஏகப்பட்ட ஏடாகூடமான கமெண்ட்டுகள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குவிந்து வருகின்றன. இனிமேல் கடவுளே அஜித்தே என்று ரசிகர்கள் சொல்ல மாட்டார்கள் என்றும் கடவுளே ஓவியா என்று தான் கத்தப் போகின்றனர் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

oviya harbhajan singh

ஹர்பஜன் சிங்குடன் இணைந்து: பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகராக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இருப்பார் போலத் தெரிகிறது. லாஸ்லியாவுடன் இணைந்து நடித்த பிரெண்ட்ஷிப் படம் ஃபிளாப் ஆன நிலையில், ஹர்பஜன் சிங் இனிமேல் நடிக்கவே மாட்டார் என நினைத்து வந்த ரசிகர்களுக்கு மீண்டுமொரு பிக் பாஸ் பிரபலத்துடன் இணைந்து நடிக்கிறேன் பாருங்க என ஓவியாவுடன் இந்த படத்தில் ஹர்பஜன் சிங் இணைந்துள்ளார்.

ஜிபி முத்து: ஓவியா மட்டுமின்றி இன்னொரு பிக் பாஸ் பிரபலமுமான ஜி.பி. முத்துவும் இந்த படத்தில் நடித்து வருவதாக அறிவித்துள்ளனர். விடிவி கணேஷும் இணைந்துள்ள இந்த படத்தை இயக்குநர் ஜான் பால் ராஜ் இயக்கி வருகிறார். ஹர்பஜன் சிங் இந்த படத்தில் கிரிக்கெட்டராக இல்லாமல் டாக்டராக நடித்துள்ளார். நடிகை ஓவியாவுக்கு பட வாய்ப்புகளே கிடைக்காமல் இருந்த நிலையில், டீப் ஃபேக் ஆபாச வீடியோ வைரலான நிலையில், ஒருவழியாக ஓவியாவுக்கு ஒரு படம் கிடைத்து விட்டதே என்றும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அம்மன் கெட்டப்பில் கையில் சூலம், தலையில் கிரீடம் என ஓவியா மாஸ் காட்டுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X