ஓவர் குடி.. அடுத்த சாவித்ரியாக மாறுகிறாரா ஓவியா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக்கிங் தகவல்!

சென்னை: சினிமாவில் நடிகை ஓவியாவுக்கு அவர் நினைத்த அளவுக்கு பெரிய இடம் கிடைக்காத விரக்தியில் தான் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டார் என்றும் குடியால் வாழ்க்கையையே இழந்த சாவித்ரி போல இவரும் ஆகப் போகிறாரா என செய்யாறு பாலு வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழில் 43 வயதிலும் சில நடிகைகள் முன்னணி நடிகைகளாக நடித்து வரும் சூழலில் 33 வயதான ஓவியாவுக்கு சினிமா பட வாய்ப்புகளே கிடைக்காமல் போய் விட்டது. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த ஓவியாவுக்கு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பெரிதாக பட வாய்ப்புகளே கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

oviya cheyyaru balu savithri

சமீபத்தில் கையில் சரக்குடன் ஓவியா வெளியிட்ட போஸ்ட் தான் இந்த சர்ச்சைக்கு காரணம் என்றும் பெண்கள் குடிப்பது பற்றி பிரச்சனையில்லை என்றும் விரக்தி காரணமாக ஓவியா குடிப்பது தான் தற்போது பேசுபொருளாக மாறியிருப்பதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.

நடிகை ஓவியா: 2007ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கங்காரு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஓவியா. களவாணி படத்தின் மூலம் தமிழில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, கலகலப்பு, மூடர் கூடம், மதயானைக் கூட்டம் என வரிசையாக பல வெற்றிப் படங்களில் நடித்தார் ஓவியா. அதன் பின்னர், திடீரென ஓவியாவின் மார்க்கெட் அதிரடியாக சரிவை சந்தித்த நிலையில், அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை.

Oviya Cheyyaru Balu Savithri

பிக் பாஸ் நிகழ்ச்சி: பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக ஓவியா கலந்துக் கொண்டார். முதல் சீசனில் ஓவியா ஓபனாக பண்ண சேட்டைகளையும் குறும்புகளையும் முதல் முதலில் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆர்மி அமைத்தனர். மற்றவர்களை விட ஓவியாவுக்குத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் ரீச் கிடைத்தது. ஆனால், திடீரென அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக சொல்லி நிகழ்ச்சியில் இருந்தே வெளியேற்றி விட்டனர். அதன் பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக ஓவியா பதிவிட்ட ட்வீட்களும் சர்ச்சையை கிளப்பின.

oviya cheyyaru balu savithri

சரக்குடன் ஓவியா: நடிகை ஓவியா 90 எம்எல் படத்தில் நடிக்கும் போதே தாராளமாக சரக்கடிப்பது, புகைப்பிடிப்பது என போல்டாக நடித்திருந்தார். சில பேட்டிகளிலும் தனக்கு இருக்கும் குடிப்பழக்கம் குறித்து அவர் வெளிப்படையாகவே பேசியுள்ளார். இந்நிலையில், லேட்டஸ்ட்டாக கையில் சரக்குடன் ஓவியா ஒரு போஸ்ட்டை வெளியிட்டு இருந்தார். மேலும், Drinking is injurious to health என கேப்ஷனும் கொடுத்திருந்தார். அது தொடர்பாக ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்த நிலையில், செய்யாறு பாலு ஓவியாவின் நிலை குறித்து பேசியுள்ளார்.

Oviya Cheyyaru Balu Savithri

அடுத்த சாவித்ரி: நடிகை சாவித்ரியின் குடிப்பழக்கம் குறித்து ஒருமுறை பத்திரிகை ஒன்று 2 பக்கத்துக்கு அப்போது எழுதிய நிலையில், எம்ஜிஆரே அந்த பத்திரிகை செய்தியை நீக்க முயற்சித்தார் என்று கூறிய செய்யாறு பாலு, நடிகையர் திலகம் என பெயர் வாங்கிய சாவித்ரியையே குடிப்பழக்கம் கொன்று விட்டது. அதே போல, ஓவியாவும் 24 மணி நேரமும் தற்போது குடிக்கு அடிமையாகி கிடக்கிறாரா? என்கிற கேள்வியை செய்யாறு பாலு எழுப்பியுள்ளார். ஓவியாவின் மனசு ரொம்பவே தங்கமான மனசு, அவருக்கான சினிமா வாய்ப்புகளை சிலர் தட்டிப் பறித்து விட்டனர். அந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் தான் அவர் மதுவுக்கு ஆளாகி விட்டார் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X