ஓவியா, யாருடன் ஒரு நாள் முழுக்க இருக்க ஆசைப்படுகிறார்னு தெரியுமா?
சென்னை: ஓவியா தான் ஒரு நாள் முழுக்க யாருடன் இருக்க ஆசைப்படுகிறார் என்பதை தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து ஓவியாவை கார்னர் செய்தனர் என்று கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக காயத்ரி ரகுராம் ஓவியாவை கார்னர் செய்தார் என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.
இந்த காரணத்திற்காக ரசிகர்கள் காயத்ரியை திட்டித் தீர்த்தனர்.

கார்னர்
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நான் ஓவியாவை கார்னர் செய்யவில்லை. மாறாக அவருக்கு உதவி தான் செய்தேன் என்று காயத்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

காயத்ரி
ஜூலி, காயத்ரி ஆகிய இருவரில் யாருடன் ஒரு நாள் செலவிட விரும்புகிறீர்கள் என்று ஓவியாவிடம் கேட்டபோது அவர் காயத்ரியின் பெயரை கூறியுள்ளார்.

நாள்
காயத்ரி என்னை நன்றாக கவனித்துக் கொள்வார் என நம்புகிறேன். அதனால் அவருடன் ஒரு நாள் செலவிட விரும்புகிறேன் என்று ஓவியா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதே இப்படி போலியாக நடிக்காதே வெளியே சென்றால் மக்கள் முன்பு அசிங்கப்படுவாய் என்று ஓவியா ஜூலியை எச்சரித்திருந்தார். அதை ப்ரொமோ வீடியோவில் கூட காட்டியிருந்தனர்.


Click it and Unblock the Notifications











