twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரையுலகினரே உஷார்... புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல்.. ஒரு பகீர் ரிப்போர்ட்!

    தன்னை ஏமாற்றி சில தயாரிப்பாளர்கள் பணம் பறித்ததாக ஔடதம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் நேதாஜி பிரவு கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

    |

    சென்னை: புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து 'ஒளடதம்' படத்தின் தயாரிப்பாளர் நேதாஜி பிரபு கண்ணீருடன் தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

    ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு தயாரிப்பில் ரமணியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒளடதம். நான்கு மாதங்களுக்கு முன்னரே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகப் பத்திரிகைகளில் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்தது.

    இப்படத்தைத் தயாரித்த நேதாஜி பிரபு ஒரு சிறிய தயாரிப்பாளர். அவரே கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துத் தயாரித்த படம் தான் ஒளடதம். இப்படத்தின் இயக்குநர் ரமணி மலையாளத் திரை உலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி.வி.சந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

    இந்தியாவின் குடும்ப வியாதி என்று சொல்லத்தக்க எழுபது மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை வியாதிக்கான மாத்திரை தயாரிப்பில் நடைபெறும் சமூக விரோத நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் திரைப்படம் தான் ஒளடதம். தயாரிப்பாளரே இப்படத்தை வெளியிடத்தயாராய் இருந்த நிலையில் எங்கிருந்தோ வந்த சிலர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துத்தடை செய்து விட்டனர்.

    அடுத்தக்கட்டத்துக்கு நகரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல்... விரைவில் டும்டும்டும்? அடுத்தக்கட்டத்துக்கு நகரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல்... விரைவில் டும்டும்டும்?

    தயாரிப்பாளர் கபளீகரம்

    தயாரிப்பாளர் கபளீகரம்

    இதுகுறித்து படக்குழு கூறியாதாவது, " கஷ்டப்பட்டு ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்து வைத்திருக்கும் புதிய தயாரிப்பாளர் ஒருவரைக் கபளீகரம் செய்து அப்படத்தைத் தனதாக்கிக் கொள்ளும் ஒரு ஏமாற்று வேலை சமீப காலமாக தமிழ்த்திரை உலகில் நடைபெற்று வருகிறது.

    புரிந்துணர்வு ஒப்பந்தம்

    புரிந்துணர்வு ஒப்பந்தம்

    இந்நிலையில் தான் ஒளடதம் திரைப்படத்திற்குள்ளும் எஸ்.அஜ்மல்கான் என்பவர் தலைமையில் படத்திற்குள் நுழைந்த ஒரு கும்பல் தங்கள் ஆட்டத்தைத் தொடங்கினர். ஒரு ஏமாற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் மூன்று மாதத்திற்குள் படத்தை வெளியிடுவதாகவும் அதற்குள் பேசிய தொகையைக் கொடுத்து விடுவதாகவும் ஒப்புகொண்டு, பணத்தையும் கொடுக்காமல் மூன்று மாதத்திற்கு மேல் பல மாதங்களையும் கடத்தினர்..

    பொய் பத்திரங்கள்

    பொய் பத்திரங்கள்

    சட்டப்படி அவர்களது ஒப்பந்தம் காலாவதியானபின் தயாரிப்பாளர் படத்தைத் தானே வெளியிட முன் வருகிறார். இந்த சமயத்தில்தான் கோடிகளில் ரூபாயைக் கொடுத்து படத்தை வாங்கியுள்ளதாகப் பொய்ப்பத்திரங்கள் தயார் செய்து, படம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி மேற்படி அஜ்மல்கான் கோஷ்டியினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கி விட்டனர்.

    இதுவே முதல்முறை

    இதுவே முதல்முறை

    தயாரிப்பாளர் அளித்திருந்த லைசென்ஸ் போட்டோ காப்பியில் உள்ள அட்டஸ்டேஷன் கையெழுத்துக்கு மேல் கோடிகளில் ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக எழுதி நீதிமன்றத்தில் காட்டியுள்ளனர்..இப்படிப்பட்ட கிரிமினல் வேலைகள் நடப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல்முறை.

     சட்டப் போராட்டம்

    சட்டப் போராட்டம்

    எத்தனையோ போராட்டங்களுடன் படத்தை எடுத்து முடித்த நேதாஜி பிரபு சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதி அரசர் முன்னால் தனது பக்கத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்லி கடந்த நான்கு மாதங்களாகப் போராடி இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறார். மேலும் குறிப்பிட்ட இந்த நபர் இதைப்போல் இன்னும் சில தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்பதை தக்க சாட்சியங்களுடன் நிரூபித்திருக்கிறார்.

    கடைந்தெடுத்த ஏமாற்றுக்காரர்கள்

    கடைந்தெடுத்த ஏமாற்றுக்காரர்கள்

    இந்த விஷக்கிருமிகள் இதையே தங்களது தொழிலாக வைத்துக்கொண்டுள்ளனர் என்றும் இனிமேல் குறிப்பிட்ட இந்த நபர்களுடன் எந்தவிதத் தொடர்பும் தமிழ்த்திரையுலகினர் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் இவர்கள் கடைந்தெடுத்த ஏமாற்றுக்காரர்கள் எனவும் நீதி அரசர் தனது தீர்ப்பில் எழுதி அவர்களின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்" என அவர்கள் தெரிவித்தனர். .

    English summary
    The producer of Owdatham movie Nethaji Prabhu says that, some anti social elements in the producer council cheated him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X