Just In
- 3 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 3 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 4 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 5 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Automobiles
அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குரல் மட்டுமில்ல.. ஆளும் சூப்பர்.. வெளியானது பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரரான சாஷோவின் போட்டோ!
சென்னை: கம்பீரமான பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் சாஷோ என்கிற சச்சிதானந்தன் என்று கூறப்பட்ட நிலையில் அவருடைய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கியது. இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வருடம் கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. தற்போது 80 நாட்களை கடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
அவரு ஏன் சாப்பாட்ட வேஸ்ட் பண்ணாரு.. கிடைத்த கேப்பில் எல்லாம் ஆரியை பழித்தீர்க்கும் ரம்யா!

பரிட்சைக்கு போவது போல்
கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் சுவாரசியம் குறைவுதான். அதற்கு காரணம் கடந்த சீசன்களை பார்த்து போட்டியாளர்கள் பக்காவாக ஹோம் வொர்க் செய்து விட்டு வந்துள்ளனர். ஆண் போட்டியாளர்களை காட்டிலும் பெண் போட்டியாளர்கள் பரிட்சைக்கு போவது போல் கரைத்துக் குடித்துவிட்டு வந்துள்ளனர்.

ஃபிங்கர் டிப்பில் கடந்த சீசன்கள்
இது அவர்களின் பர்ஃபாமன்ஸ் மற்றும் புரமோ நினைப்பு, கேமரா கான்ஷியஸ் போன்றவற்றிலேயே தெரிகிறது.
அதிலும் அனிதா சம்பத் போடும் கணக்குகளை எல்லாம் பார்க்கும் போது பிக்பாஸின் கடந்த சீசன்களை ஃபிங்கர் டிப்பில் வைத்திருப்பது, அவர் பல இடங்களில் போடும் கால்குலேஷன்களிலேயே தெரிந்திருக்கும். அந்த அளவுக்கு கடந்த சீசன்களை தரவாக ஃபாலோ பண்ணுகியிருக்கிறார்.

வயதுக்கு மரியாதை இல்லை
கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் போட்டியாளர்கள் கொஞ்சம் எல்லை மீறி செல்கின்றனர். வயதில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை, எடுத்தெறிந்து பேசுவது, ஆண் போட்டியாளர்கள் சிலர் பெண் போட்டியாளர்களை வசை பாடுவது, பெண் போட்டியாளர்களை அவனே இவனே என்றும் மியூம் போடும் அளவுக்கு வார்த்தைகளால் திட்டுவதுமாய் இருந்து வருகின்றனர்.

சாண்டி கவினை கண்டித்திருந்தால்..
கடந்த சீசனில் சாண்டி மற்றும் கவினை ஓரளவுக்கு கமல் கண்டித்திருந்தால் இந்த சீசனில் போட்டியாளர்களின் வயதுக்காவது மரியாதை கிடைத்திருக்கும். இருந்தபோதும் பிக்பாஸின் நிகழ்ச்சிக்கான வரவேற்பு எதுவும் குறையவில்லை.

கொண்டாட்டம்தான்..
குறிப்பாக பிக்பாஸ் குரலைக் கேட்பதற்காகவே பெரும் கூட்டம் ஆஜராகி விடுகிறது. தனது கம்பீர குரலில் பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்க, நீங்க போகலாம்.. என்ன காரணம்.. என கேட்பதே தனி அழகு. பிக்பாஸ் எக்ஸ்ட்ராவாக ஓரிரு வார்த்தை பேசிவிட்டால், கொண்டாட்டம் ஹவுஸ்மேட்டுகளுக்கு மட்டுமில்லை ரசிகர்களுக்கும்தான்.

செல்ல அழைத்து..
கடந்த சீசன்களில் சாண்டியை சிஷ்யா, முகேனை முகேன் ஐய்யா என்றழைத்தது, நிகழ்ச்சியின் இறுதி நாளில் முகேனிடம் அன்பு என்றும் அநாதை இல்லை என்று கூறியது போன்ற எல்லாமே ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த சீசனில் கேப்பிரியல்லாவை கேபி என்று செல்லமாக அழைத்தும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் பிக்பாஸ்.

அழும்போதும் அழகாதான் இருக்கீங்க
அதுமட்டுமின்றி 70 நாட்கள் கடந்துவிட்டது இந்த வீட்டில் நீங்கள் இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள் என்று ஷிவானி முதல் ஆரி வரை அனைவரையும் கதறவிட்டார். ஷிவானி தேம்பி தேம்பி அழுதபோது அழும் போதும் அழகாதான் இருக்கீங்க.. என்றும் ஷிவ்வு என்றும் அழைத்து திக்குமுக்காட வைத்தார்.

சிஷ்யா என்றழைத்து..
இதேபோல் அர்ச்சனாவை அர்ச்சு, ஆஜித்தை ஆஜு, ஆரியை சிஷ்யா, பாலாவை தம்பி பாலா, அனிதாவை கன்னுக்குட்டி என்று அழைத்தும் சந்தோஷப்படுத்தினார். போட்டியாளர்களை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்கும் விதமே தனியாக இருந்து வருகிறது.

ரகசியமாக இருந்த முகம்
மேலும் ஹவுஸ்மேட்ஸ்களை அவ்வப்போது கலாய்ப்பது, பாராட்டுவது என ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குரலை மட்டுமே ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் அந்த குரலுக்கான முகம் இதுவரை ரகசியமாகவே இருந்தது வந்தது. கடந்த சீசனில் பிக்பாஸ் குரலின் சொந்தக்காரரை காண விரும்பிய சாண்டி முகேன் உள்ளிட்ட சிலர் அவரின் போட்டோவை கேட்டனர்.

ரசிகர்கள் ஆர்வம்
அப்போது வெறும் நிழலாக தெரியும் போட்டோவை அனுப்பி வைத்து ஏமாற்றினார் பிக்பாஸ். அதனை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் இதற்கு நீங்கள் போட்டோவை அனுப்பாமலே இருந்திருக்கலாம் என்றனர். இருந்த போதும் பிக்பாஸின் அந்த காந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பதை காண ரசிகர்கள் பெரும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

பிக்பாஸின் போட்டோ
இந்நிலையில் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் சாஷோ என்கிற சச்சிதானந்தம் தான் என்பவர்தான் என்ற தகவல் ஏற்கனவே அறிந்ததுதான். சாஷோ டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மட்டுமின்றி ஸ்ரிக்ப்ட் ரைட்டர் என்பதும் தெரிந்த ஒன்றுதான். இதுவரை கம்பீர குரலை மட்டுமே வெளிப்படுத்தி வந்த பிக்பாஸ் எனும் சாஷோவின் போட்டோ வெளியாகியுள்ளது.

டைட் ஹேர் கட்
காதுகளில் ஸ்டைலாக கடுக்கன், டைட் ஹேர் கட் என ஹீரோ லுக்கில் உள்ள சாஷோ பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளாராம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் பிச்சு உதறுவாராம் மனிதர்.

அங்கிள் என்று நினைத்தவர்களுக்கு..
பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் அத்தனை நாட்களும் பிக்பாஸ் வீட்டின் செட்டே கதி என இருப்பாராம் சாஷோ. இதுவரை குரலை கேட்டு, பிக்பாஸ் நிச்சயம் 40 வயதுக்கு மேற்பட்ட அங்கிளாகதான் இருப்பார் என்று நினைத்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது சாஷோவின் போட்டோ.

ஆளும் சூப்பர்...
சாஷோவின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் குரல் மட்டும் இல்லை, ஆளும் சூப்பர்தான் என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர் தொப்புளைக்காட்டிய ரம்யாவை, லுக்கிங் நைஸ் என்று ஜொள்ளுவிட்ட போதே டவுட் வந்தது, நிச்சயம் இந்த பிக்பாஸ் ஒரு யங் மேனாகதான் இருப்பார் என்று என கேலியாக கமெண்ட்டடித்து வருகின்றனர்.