twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரே மேடையில் 1418 பேர் நடனம்... கின்னஸில் இடம் பிடித்தது தமிழர்களின் ஒயிலாட்டம்!

    தமிழர்களின் ஒயிலாட்டக் கலை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

    |

    சென்னை: தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான ஒயிலாட்டம் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது.

    தமிழர்களின் பாரம்பரிய கலையான ஒயிலாட்டத்தை, சினிமா பின்னணி பாடர் வேல்முருகன் முன்னெடுத்து செல்கிறார். அந்த வகையில் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் ஒயிலாட்ட நிகழ்ச்சி ஒன்றிற்கு வேல்முருகன் ஏற்பாடு செய்திருந்தார்.

    oyilattam gets place in guiness book

    சென்னையை அடுத்த திருதிருநின்றவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரே நேரத்தில் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 1418 கலைஞர்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடி அசத்தினர்.

    oyilattam gets place in guiness book

    ஒரே மேடையில் 1418 பேர் ஒயிலாட்டம் ஆடியது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. இதற்கான சான்றிதழை கின்னஸ் அதிகாரிகள் வழங்கினர்.

    oyilattam gets place in guiness book

    இந்த சாதனை நிகழ்வில் தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், இசையமைப்பாளர்கள் கங்கைஅமரன், ஜேம்ஸ்வசந்தன், கவிஞர் பிறைசூடன், நடிகர்கள் தம்பிராமையா, வேல்சிவா, பி.ஆர்.ஓ,யூனியன் தலைவர் விஜயமுரளி, கலாவேல்முருகன், சௌமியாராஜேஷ், கின்னஸ் குழு சார்பில் விவேக் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

    English summary
    The tamil traditional dance Uyilattam gets place in guiness book.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X