“அல்டிமேட் பியூட்டி எமி ஜாக்சன்” – ஒளிப்பதிவு ஜாம்பவான் பி.சி.ஸ்ரீராம் புகழாரம்!
சென்னை: தமிழ் திரைப்பட உலகின் பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம், எமி ஜாக்சனை "அல்டிமேட் பியூட்டி" என்று வர்ணித்து, புகழாரம் சூட்டியுள்ளார்.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் "ஐ".
இதில் விக்ரம் கதாநாயகனாகவும், எமி ஜாக்சன் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு:
இப்படத்திற்கு பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் தனது சமூக வலைத்தளத்தில் தான் எடுத்த எமிஜாக்சனின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அல்டிமேட் பியூட்டி எமி:
இதைப் பற்றி அவர் கூறும்போது, "எமிஜாக்சன் ஒரு அல்டிமேட் பியூட்டி. "ஐ" படத்தில் இவருடைய கதாபத்திரத்திற்கு இவரை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருந்திருக்க மாட்டார்கள். கடைசி நிமிடத்தில் தான் இவர் நடிப்பது உறுதியானது" என்று தெரிவித்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா:
இப்படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

அர்னால்ட் பங்கேற்பு:
இதில் ஹாலிவுட் ஸ்டார் அர்னால்ட் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.

முன்னணி பிரபலங்கள்:
மேலும் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இவ்விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.


Click it and Unblock the Notifications











