ஸ்கிரிப்டை படிச்சிட்டு ஆடிப்போயிட்டேன்.. 96 பார்ட் 2 அப்டேட் தந்த பிரபலம்.. மீண்டும் த்ரிஷாவா?
சென்னை: கடந்தாண்டு இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான மெய்யழகன் திரைப்படம் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றது. இப்படம் தமிழ் சினிமாவில் பார்க்க வேண்டிய படம் என்றும் தெரிவித்தார்கள். அண்மையில் நடிகர் நானி இப்படம் குறித்து பெருமையாக பேசியிருந்தார். 1000 கோடி 500 கோடி செலவு செய்து எடுக்கும் திரைப்படத்தில் இல்லாத மேஜிக்கை மெய்யழகன் படத்தை பார்த்ததாகவும் கூறி பாராட்டியிருந்தார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலம் ஒருவர் பாராட்டி பேசியிருப்பது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
96 படத்தின் மூலம் இயக்குநர் பிரேம் குமார் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். இப்படத்தின் மூலம் த்ரிஷா மீது அதீத அன்பை ரசிகர்கள் பொழிந்தனர். இப்படத்தில் காதலித்து சண்டை போட்டு பிரிந்த காதலை விட காரணமே இல்லாமல் பிரிந்து சென்ற காதலின் வலியை உணர்த்திய படமாக ரசிகர்களின் கண்களில் கண்ணீரை கசிய வைத்தது. இப்படத்தை தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் ரீமேக் செய்தனர். மற்ற மொழிகளில் பிரம்மாண்ட ஹிட் அடைந்தது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பிரேம் குமார் மெய்யழகன் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

மேஜிக்: மெய்யழகன் படத்தில் அரவிந்த் சாமி, கார்த்தியும் இணைந்து நடித்திருந்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் 96 படத்தை போன்றே அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. ரசிகர்களும் வியந்து பாராட்டினார்கள். க்ளாசிக் சினிமா இதுதான் என வியந்து பாராட்ட தொடங்கினர். இப்படம் குறித்த புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இயக்குநர் பிரேம்குமார் நிச்சயமாக 96 2 திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும். இப்படம் 96 போன்ற காதல் கதையாகத்தான் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். மெய்யழகன் போன்ற மேஜிக்கை நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.
ஓளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் பாராட்டு: பிரபல நாளிதழ் நடத்திய விருது விழாவில் இயக்குநர் பிரேம்குமார் மெய்யழகன் படத்திற்காக விருதுகளை பெற்றார். அப்போது அவருக்கு விருது வழங்கிய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பிரேம்குமாரை வியந்து பாராட்டி பேசியிருந்தார். இதில், யாருன்னே தெரியாத ஒரு பையன் வந்து என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்தான். அதை படித்து விட்டு ஆடி போயிட்டேன். அது ஒரு அழகான கதை. அந்த கதைக்கு அவன் ஹேப்பி மேன் என்று பெயர் வைத்திருக்கலாம். அந்த ஸ்கிரிப்ட் வேறு ஒன்றும் இல்லை மெய்யழகன் தான். அப்படம் எனக்கு இன்னும் ஆச்சரியத்தை அளித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் பத்திரமாக அந்த ஸ்கிரிப்ட் என்னிடமே இருக்கிறது. உண்மையான மெய்யழகன் யார் என்றால் பிரேம்தான். பிரேம் அடுத்து இயக்கும் 96 2 படத்தில் நான் வேலை செய்ய போகிறேன் என பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

செம காம்பினேஷன்: இயக்குநர் பிரேம்குமாரும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் இணைந்தால் வேற லெவலில் இருக்கும். இருவரும் ஒரு படத்திற்கு தேவையான மாயாஜாலங்களை நிகழ்த்துவார்கள் என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவை வியக்கும் ஒரு கேமராமேன் என்றும் புகழ் பாட தொடங்கியுள்ளனர்.மேலும், 96 படத்தை பார்த்து கண்ணீர் விட்ட ரசிகர்கள் இயக்குநர் பிரேம்குமாரின் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கின்றனர். மேலும் எப்போதும் இப்படம் தாெடங்கப்படும் எப்போது வெளியாகும் என்ற ஆவலும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் மீண்டும் த்ரிஷா, விஜய் சேதுபதி நடிக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











