சந்திரமுகி 2ம் பாகத்தின் கதை வேறு… ரஜினி நடிக்கவில்லை… பி வாசு விளக்கம் !

சென்னை : சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து பி வாசு விளக்கம் அளித்துள்ளார்.

சந்திரமுகி முதல் பாகத்தின் கதை வேறு தற்போது உருவாக உள்ள இரண்டாம் பாகத்தின் கதை வேறு என்பதால் சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்தவர்கள் இரண்டாவது பாகத்தில் கிடையாது என்றார்.

மேலும், ரஜினி நடிக்கிறார் என்ற தகவல் உண்மை இல்லை என்று கூறினார்.

மிகக்பெரிய வெற்றி

மிகக்பெரிய வெற்றி

சூப்பர் ஸ்டார்' ரஜினி நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதன் அடுத்தப்பாகம் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருந்த நிலையில், 15 ஆண்டுகள் கழித்து நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மலையாள படத்தின் ரீமேக்

மலையாள படத்தின் ரீமேக்

மலையாளத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்த 'மணிசித்ரதாழ்' படம் தான் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு சந்திரமுகி என்ற பெயரில் எடுக்கப்பட்டது.மலையாள படத்தில் நடிகை சோபனா, மோகன்லால் உள்ளிட்டவர்கள் நடித்தார்கள். இதில் சிறப்பாக நடித்ததற்காக சோபனாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

ரஜினி நடிக்கவில்லை

ரஜினி நடிக்கவில்லை

இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பி.வாசு. சந்திரமுகி முதல் பாகத்தின் கதை வேறு தற்போது உருவாக உள்ள இரண்டாம் பாகத்தின் கதை வேறு என்பதால் சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்தவர்கள் இரண்டாவது பாகத்தில் கிடையாது என்றார். மேலும், ரஜினி நடிக்கிறார் என்ற தகவல் உண்மை இல்லை என்றும் கூறினார்.

Recommended Video

Chandramukhi 2 Release Update | நான் கனவுல கூட நினைக்கல! DHANUSH Best Actor | CINEMA UPDATES
விரைவில் அறிவிப்பு வரும்

விரைவில் அறிவிப்பு வரும்

தற்போது ராகவா லாரன்ஸ் ருத்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். மேலும், இதில் நடிக்கவிருக்கும் நடிகைககள் பற்றி பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஜோதிகா, கியாராஅத்வானி, சிம்ரன் பெயர்கள் சொல்லப்படுகின்றன. கதை பணி நடந்து கொண்டு இருப்பதால் ஹீரோயின் விவரம் விரைவில் வெளியாகும் என்று பி வாசு கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X