என்னாது நான் இறந்துவிட்டேனா?: வீடியோ வெளியிட்ட பி. வாசு
Recommended Video

சென்னை:இயக்குனர் பி. வாசு இறந்துவிட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இயக்குனரும், நடிகருமான பி. வாசு இறந்துவிட்டதாக ஒரு செய்தி நேற்று முதல் தீயாக பரவிக் கொண்டிருந்தது. வாசு இறந்துவிட்டாராம் என்று சமூக வலைதளங்களிலும் பேசிக் கொண்டிருந்தனர்.
வாட்ஸ்ஆப்பிலும் இந்த தகவல் தீயாக பரவியுள்ளது.

வாட்ஸ்ஆப்
பி. வாசு இறந்துவிட்டார் என்ற வாட்ஸ்ஆப் தகவல் வாசுவுக்கே சென்றுள்ளது. என்னது நான் இறந்துவிட்டேனா என்று அவர் சிரித்திருக்கிறார். பின்னர் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பியுள்ளார்.

விளக்கம்
தான் இன்னும் உயிருடன் இருக்கும் விஷயத்தை வீடியோ மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் பி. வாசு. அந்த வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள், நலம் விரும்பிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பொய் தகவல்
என் மீது அன்பு வைத்திருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் வணக்கம். என்னை பற்றிய வதந்தியை நானே கேள்விப்பட்டேன். எனக்கே வாட்ஸ்ஆப்பில் வந்தது. எனக்கு சிரிப்பு வந்தது என்று வீடியோவில் தெரிவித்துள்ளார் வாசு.
நலம்
நான் இன்று தான் ஜிம்மில் 6 கிலோமீட்டர் நடந்துவிட்டு வந்த பிறகே இந்த நியூஸ் எனக்கு வந்தது. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரே சிரிப்பு வருகிறது. நான் நல்லா இருக்கிறேன், ரொம்ப நல்லா இருக்கிறேன். ஆரோக்கியமாக இருக்கிறேன். இந்த வருஷம் 3 படங்கள் இயக்கப் போகிறேன் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் வாசு.


Click it and Unblock the Notifications











