மேக்கப் போட்டவுடன் கேமரா முன்பு மின்னலாக நிற்பார் ரஜினி: பி. வாசு
சென்னை: தமிழ் சினிமாவில் நேரம் தவறாமல் இருப்பதில் சிவாஜி கணேசனை அடுத்து சூப்பர் ரஜினிகாந்த் தான் என்று இயக்குனர் பி. வாசு தெரிவித்துள்ளார்.
அண்மையில் சென்னையில் நடந்த பட விழாவில் இயக்குனர் பி. வாசு கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணியாற்றியது பற்றியும், அவரது நற்குணங்கள் பற்றியும் பேசினார்.
வாசு ரஜினியை புகழ்ந்து என்ன பேசினார் என்று பார்ப்போம்.

சிவாஜி
நேரம் தவறாமல் ஷூட்டிங்கிற்கு வரும் நடிகர்கள் பலர் இருந்தாலும் அதில் சிவாஜி கணேசன் முக்கியமானவர். அவர் ஷூட்டிங் துவங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பே ஸ்பாட்டுக்கு வந்து மேக்கப் போட்டுக் கொண்டு அன்றைக்கு பேச வேண்டிய வசனங்களை தனக்குத் தானே பேசி ஒத்திகை நடத்திக் கொள்வாராம் என்றார் வாசு.

சிவாஜியை அடுத்து
சிவாஜியை அடுத்து பலர் நேரம் தவறாமல் ஷூட்டிங்கிற்கு வந்தாலும் அதில் ரஜினிகாந்த் குறிப்பிடத்தக்கவர் என்று வாசு தெரிவித்துள்ளார்.

லேட்டா வருவார் என்று நினைத்தால்
பணக்காரன் ஷூட்டிங்கின்போது ரஜினி முன்னணி நடிகராச்சே அதனால் காலதாமதமாக வருவார் என்று நினைத்து நான் பொறுமையாக வந்தால் அவர் முன்பே வந்து மேக்கப்பெல்லாம் போட்டுக் கொண்டு தயாராக இருந்தார் என்று நெகிழ்ந்தார் வாசு.

அரட்டை இல்லை
ரஜினி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு யாரையாவது அழைத்து வந்து பேசிக் கொண்டிருக்க மாட்டார். அன்றைய காட்சிகள் தவிற வேறு எதைப் பற்றியும் நினைக்கவே மாட்டார் என்று வாசு தெரிவித்தார்.

மின்னல் மாதிரி
ரஜினி மேக்கப் போட்டவுடன் கேமரா முன்பு மின்னலாக வந்து நின்றுவிடுவார். காட்சிகளை ஒரே டேக்கில் நடித்துவிடுவார். தன்னை நம்பி படம் எடுக்கும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தன்னால் இடையூறு வந்துவிடக் கூடாது என்பதில் ரஜினி உறுதியாக இருப்பவர் என்றார் வாசு.


Click it and Unblock the Notifications











