சினிமா குறித்து உங்களுக்கு ஒன்னுமே தெரியாது.. மோகன்ஜிக்கு பளார் விட்ட பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர்

சென்னை: சமகாலத்தில் தமிழ் சினிமாவின் திசை வழிப்போக்கினை மாற்றிய இயக்குநர் என்றால், அது பா. ரஞ்சித் தான். அவரது முதல் படமான அட்டக்கத்தி தொடங்கி கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான படமான, தங்கலான் வரை அவரது திரைப்பயணம், அதையொட்டி அவர் மேற்கொள்ளும் சமூக, பண்பாட்டுத்தள பணிகள் திரைத்துறையில் மட்டும் இல்லாமல், தமிழ் நாடு அரசியல் களத்திலும், மிகவும் முக்கியமானது. இப்படியான நிலையில், அவரது உதவி இயக்குநர், குண்டல பாலகுருநாதம், தனது எக்ஸ் பக்கத்தில், இயக்குர் மோகன் ஜிக்கு சினிமா என்றாலே என்னவென்று தெரியாது, கொஞ்சமாவது போய்ப் படியுங்கள் எனத் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர் வர்ஷா பரத். இவர் பேட் கேர்ள் என்ற படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமாகின்றார். இந்தப் படத்தினை வெற்றி மாறனே தயாரிக்கவும் செய்துள்ளார். வெற்றி மாறனுடன் இணைந்து அனுராக் காய்ஷாப்பும் இந்தப் படத்தினை தயாரித்துள்ளார். படத்தின் டீசர் படக்குழு தரப்பில் இருந்து கடந்த 26ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. படம் சர்வதேச திரைப்படத் திருவிழாவான, ரோட்டர்டோம் திரைப்படத் திருவிழாவிற்கு தேர்வாகியுள்ளது.

mohan g

மோகன் ஜி: இப்படியான நிலையில் படக்குழுவினருக்கு இயக்குநர் பா. ரஞ்சித் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு, பதில் அளித்திருந்த இயக்குநர் மோகன் ஜி மிகவும் காட்டமான முறையில் விமர்சித்திருந்தார். அதாவது அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " பிராமணப் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது, இந்த குழுவினருக்கு எப்போதும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாகத்தான் உள்ளது. வெற்றி மாறன், அனுராக் காஷ்யப் & கோ போன்றோர்களிடம் இருந்து இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? பிராமண அப்பா அம்மாவை கிண்டலடிப்பது மிகவும் பழைய டெக்னிக். உங்கள் மகள்கள் மற்றும் குடும்பத்தினரை இதுபோலக் காட்சிப்படுத்துங்கள்" என பதிவிட்டிருந்தார்.

mohan g

பளார்: இப்படியான நிலையில், பா. ரஞ்சித்தின் உதவி இயக்குர் குண்டல பாலகுருநாதம் தனது எக்ஸ் பக்கத்தில் மோகன் ஜியின் பதிவுக்கு மிகவும் காட்டமாக பதில் அளித்துள்ளார். இது மட்டும் இல்லாமல், அவரை கடுமையாகவும் விமர்சித்துள்ளார். " உங்களுக்கு சினிமா என்றால் என்ன அது எப்படி உருவானது என்று கூட தெரியாது. சினிமாவின் பிரதான நோக்கமே, சமூக கலாச்சார விஷயங்களைக் கைப்பற்றுவது மட்டுமே. முதலில் எதையாவது படித்து கொஞ்சமாவது அறிவினை வளர்த்துக் கொள்ளுங்கள்.

mohan g

புதிய அலை: பா. ரஞ்சித், வெற்றி மாறன், அனுராக் காஷ்யப் போன்றவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அழுவதை முதலில் நிறுத்துங்கள். அவர்கள் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியுள்ளார்கள். சினிமா என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. இதற்கு மோகன் ஜி பதில் அளிக்க, குண்டல பாலகுருநாதமும் பதில் அளித்து வருவதால், இருவருக்கும் இடையில், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

mohan g

More from Filmibeat

Read more about: mohan g மோகன் ஜி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X