சும்மா சிரிச்சதுக்கே ஆடிப்போயிட்டாங்க.. அவ்ளோ பவர் இருக்கு.. மீண்டும் ரஜினியை சீண்டிய பா. ரஞ்சித்?
சென்னை: அம்பேத்கரின் 133வது பிறந்த தினம் இன்று அம்பேத்கர் ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதத்தை தலித் இயக்க மாதமாக சென்னையில் கொண்டாடி வருகின்றனர். பா. ரஞ்சித் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தனது நீலம் அமைப்பு சார்பாக நடத்தி வருகிறார். தம்மா தியேட்டர் விழா நேற்று நடைபெற்ற நிலையில், பா. ரஞ்சித் பேசியது மீண்டும் ரஜினிகாந்த் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை சினிமாவில் பதிவு செய்கிறேன் என தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். அட்டகத்தி படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ரஜினிகாந்தை வைத்து கபாலி படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். ஆனால், மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அவர் இயக்கிய காலா படம் படுதோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் பா. ரஞ்சித் படங்களில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை.
சங்கின்னு சொல்லாதீங்க?: நடிகர் ரஜினிகாந்தை சங்கின்னு சிலர் கிண்டல் செய்வது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு. சங்கியா இருந்தா லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக ரஜினிகாந்த் நடித்திருக்க மாட்டார் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நன்றி கெட்ட ரஞ்சித்: ரஜினிகாந்தை வைத்து தலித் அரசியல் சினிமா எப்படி பண்ணிங்க கபாலி மற்றும் காலா படத்தின் குறியீடு மற்றும் உள் கருத்து ரஜினிகாந்துக்கு புரிந்து தான் நடித்தாரா? என்பது போல பா. ரஞ்சித்திடம் அருகே இருந்தவர் பேச அதற்கு பதிலளிக்காமல் நக்கல் சிரிப்பை சிரித்து பா. ரஞ்சித் ரஜினிகாந்தை அசிங்கப்படுத்தி விட்டார் என நன்றி கெட்ட ரஞ்சித் ஹாஷ்டேக்கை போட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் பா. ரஞ்சித்தை கடந்த 2 நாட்களாக சோஷியல் மீடியாவில் விளாசினர்.
நம்ம சிரிப்புக்கு பவர் இருக்கு: ரஜினிகாந்த் ரசிகர்களை கூல் செய்யும் விதமாக பேசாமல், நேற்று நடைபெற்ற தம்மா தியேட்டர் விழாவில் கலந்துக் கொண்டு பேசிய பா. ரஞ்சித் "சும்மா சிரிச்சதுக்கே இப்படி ஆகிடுச்சு, நம்ம சிரிப்புக்கு பவர் இருக்கு.. அதை சரியா பயன்படுத்தணும்" என பேசியிருப்பது மறுபடியும் ரஜினிகாந்த் ரசிகர்களை கலங்கடித்திருக்கிறது.
தங்கலான் ரிலீஸ் எப்போ?: இயக்குநர் பா. ரஞ்சித் தலித் இயக்கத்தை தீவிரமாக நடத்தி வருகிறார். தலித் அரசியல் பேசப்பட வேண்டும் என்றும் அவர்களது கலை படைப்புகள், இலக்கிய படைப்புகள் பெரிய அளவில் முன்னேற வேண்டும் என உழைத்து வருவது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சியான் விக்ரமை வைத்து அவர் இயக்கியுள்ள தங்கலான் திரைப்படம் மே மாதம் அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











