மேட்ச் பார்க்க ரெடியா? சார்பட்டா பரம்பரை 2.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை : சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரு முற்போக்கு சிந்தனையாளரான பா ரஞ்சித், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இவர் இயக்கத்தில் உருவான அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என ஒவ்வொரு கதையும் வித்தியாசமானதாகவே இருக்கும்.

இயக்குநர் பா.ரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித் நடிகர் விக்ரமுடன் தங்கலான் படத்தின் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், கர்நாடகாவில் உள்ள கேஜிஎஃப்பில் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நடிகை மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

சார்பட்டா பரம்பரை 2

சார்பட்டா பரம்பரை 2

தங்கலான் படத்தில் பிஸியாக இருக்கும் பா.ரஞ்சித், சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தகவலை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ''Match பாக்க ready யா? ரோஷமான ஆங்கில குத்துச்சண்டை Round 2'' என பதிவிட்டுள்ளார். இந்த தகவலால் , சார்பட்டா பரம்பரை ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

2021 ஆம் ஆண்டு வெளியான படம் சார்பட்டா பரம்பரை இதில் ஆர்யா, துஷ்ரா விஜயன், பசுபதி, ஜான் கொக்கைன், ஜான் விஜய்கலையரசன், ஷபீர் கல்லறக்கல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் சார்பட்டா பரம்பரைக்கு இசையமைத்திருந்தார். இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றது.

சார்பட்டா பரம்பரை VS இடியாப்ப பரம்பரை

சார்பட்டா பரம்பரை VS இடியாப்ப பரம்பரை

1970 காலகட்டத்தில், வட சென்னையில் சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை என இரு பரம்பரைகளுக்கு இடையே நடந்த குத்துச் சண்டையை மையப்படுத்திய சார்பட்டா பரம்பரம் படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் ஆர்யா உண்மையான குத்துச்சண்டை வீரரை போல சும்மா மிரட்டலாக நடித்திருந்தார்.குறிப்பாக ரங்கன் வாத்தியராக வந்த பசுபதியின் நடிப்பு பாராட்டை பெற்றது. இப்போது அந்த படத்தில் கபிலன், ரங்கன் வாத்தியாரை சைக்கிளில் அழைத்து செல்லும் காட்சியை சிலர் மீம்ஸ்களாக பகிரும் படங்கள், இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X