எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. ஏறி ஆடு கபிலா.. ஆர்யாவின் சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்து இயக்கி வரும் ஆர்யாவின் 30வது படத்திற்கு சார்பட்டா பரம்பரை என டைட்டில் வைக்கப்பட்டு, மெர்சலான ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி உள்ளது.

முன்னதாக இந்த படத்துக்கு சல்பேட்டா பரம்பரை என டைட்டில் இருக்கும் என சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் டைட்டில் சார்பட்டா பரம்பரை என வைக்கப்பட்டுள்ளது.

முரட்டுத் தனமான உடம்புடன் குத்துச் சண்டை களத்தில் கபிலனாக ஆர்யா இருக்கும் போஸ்டர் வைரலாகி வருகிறது.

பீரியட் பிலிம்

பீரியட் பிலிம்

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வரலாற்று திரைப்படமாக 'சார்பட்டா பரம்பரை' உருவாகி வருகிறது. பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் இயக்குவதற்கு முன்பாக தமிழில் ஒரு பீரியட் பிலிமை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி உள்ளார்.

ஏறி ஆடு கபிலா

ஏறி ஆடு கபிலா

"இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல.. இது நம்ப ஆட்டம்.. எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. ஏறி ஆடு.. கபிலா! என குறிப்பிட்டு, சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்துள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித். முரட்டுத் தனமான பாக்ஸர் தோற்றத்தில் ஆர்யா மிரட்டுகிறார்.

பழைய விளம்பரங்கள்

பழைய விளம்பரங்கள்

கொட்டாய் ஸ்டேடியத்தில் ஆர்யா பாக்ஸிங் கிளவுஸுடன் ஆஜானுபாகுவாக நிற்கிறார். பின்னாடி, மக்கள் கூட்டம் திரண்டு நின்று வேடிக்கை பார்க்க, அதற்கு பின்னாடி, கோபால் பல்பொடி, காளிமார்க் சோடா, எவரெடி பேட்டரி உள்ளிட்ட சில பழைய விளம்பர பேனர்களும் தொங்க விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் ஹீரோயின்

தனுஷ் ஹீரோயின்

சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியக சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார். நோட்டா படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு எதிராக அரசியல் பேசி அசத்திய சஞ்சனா, தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெடித்த சர்ச்சை

வெடித்த சர்ச்சை

சார்பட்டா பரம்பரை என மீண்டும் சாதிய அடையாளத்துடன் பா. ரஞ்சித் படம் இயக்கி உள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் அவரது ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி, சர்ச்சைகளை கிளப்பி சண்டை போட்டு வருகின்றனர். பா. ரஞ்சித் ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுத்தும் கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X