சம்பவம்.. பா. ரஞ்சித் தயாரிப்பு.. மாரி செல்வராஜ் இயக்கம்.. கபடி வீரராக களமிறங்கும் துருவ் விக்ரம்!

சென்னை: நடிகர் துருவ் விக்ரமின் புதிய படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிக்க உள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ள இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்குகிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் கபடி வீரராக துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்ரம்

விக்ரம் மகன்

விக்ரம் மகன்

கோலிவுட்டை தனது நடிப்பால் கலக்கி வரும் நடிகர் சியான் விக்ரமின் மகனும் தனது முதல் படத்திலேயே, தனது நடிப்புத் திறமையை தமிழ் சினிமாவில் வெளிக்காட்டி உள்ளார். அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தில் இளம் காதலராகவும், சைக்கோ டாக்டராகவும் நடித்து அசத்தி இருந்தார்.

அப்பாவுடன்

அப்பாவுடன்

ஆதித்ய வர்மா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை துருவ் விக்ரமுக்கு கொடுக்கவில்லை. அடுத்ததாக அப்பாவுடன் இணைந்து சியான் 60 படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். ஜகமே தந்திரம் படத்தை இயக்கி முடித்த கார்த்திக் சுப்புராஜ் சியான் 60 படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்த துருவ் விக்ரமின் போட்டோஸ் சமூக வலைதளத்தில் டிரெண்டானது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில்

மாரி செல்வராஜ் இயக்கத்தில்

சியான் 60 படத்தைத் தொடர்ந்து துருவ் விக்ரம் மீண்டும் சோலோவாக நடிக்க உள்ள புதிய படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக தனுஷின் கர்ணன் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

பா. ரஞ்சித் தயாரிப்பு

பா. ரஞ்சித் தயாரிப்பு

பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தயாரித்த இயக்குநர் பா. ரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜின் மூன்றாவது படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படம் துருவ் விக்ரமுக்கும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் மூவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

விக்ரம் சாருக்கு ப்ரியங்கள்

விக்ரம் சாருக்கு ப்ரியங்கள்

இயக்குநர் பா. ரஞ்சித் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மகிழ்ச்சியும் அன்பும் அண்ணா என பா. ரஞ்சித்துக்கு நன்றி சொன்ன மாரி செல்வராஜ், பெரும் நம்பிக்கையும் அன்பையும் அளித்த சியான் விக்ரம் சாருக்கு ப்ரியங்கள் எப்போதும் என நன்றி தெரிவித்துள்ளார்.

கபடி வீரர்

கபடி வீரர்

தனுஷின் கர்ணன் திரைப்படம் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தனது அடுத்த படத்தை இயக்க ரெடியாகி விட்டார் மாரி செல்வராஜ். இந்த படத்தில் கபடி வீரராக துருவ் விக்ரம் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாரி செல்வராஜ் - துருவ் பட அப்டேட்டை பார்த்த தனுஷ் ரசிகர்கள் கர்ணன் அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X