twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனிமேல் சேரவே வாய்ப்பில்லையா.. பா. ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் இடையே அவ்ளோ பெரிய பிரச்சனையா?

    |

    சென்னை: அட்டகத்தி முதல் சார்பட்டா பரம்பரை படம் வரை இணைந்து பணியாற்றிய பா. ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி நட்சத்திரம் நகர்கிறது படத்தைத் தொடர்ந்து சியான் 61 படத்திலும் இணையாதது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    நெருங்கிய நண்பர்களாக தமிழ் சினிமாவையே கலக்கிக் கொண்டு இருந்த இருவரும் லேசான மனஸ்தாபம் காரணமாக ஒரு படத்தில் மட்டும் பிரிந்தனர் என்று பார்த்தால், இனிமேல் அவர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றவே வாய்ப்பில்லை என தெரிவதாக கோலிவுட்டில் மிகப்பெரிய பேச்சே கிளம்பி இருக்கிறது.

    அப்படி இருவருக்கும் இடையே என்ன தாங்க பிரச்சனை என்றும் ரசிகர்கள் கேள்விகளை கிளப்பி வருகின்றனர்.

    கமலுக்கு பிரபுதேவா, பிரபுவிற்கு ராஜு சுந்தரம்... பிரதாப் போத்தன் படத்தில் நடந்த சுவாராஸ்யம்கமலுக்கு பிரபுதேவா, பிரபுவிற்கு ராஜு சுந்தரம்... பிரதாப் போத்தன் படத்தில் நடந்த சுவாராஸ்யம்

    அட்டகத்தியில் அறிமுகம்

    அட்டகத்தியில் அறிமுகம்

    இயக்குநராக பா. ரஞ்சித்தும், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனும் கடந்த 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற ஆடிப் போனா தாவணி, நடுக்கடலில் கப்பலை இறங்கி தள்ள முடியுமா? உள்ளிட்ட பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. சந்தோஷ் நாராயணனும் பா. ரஞ்சித்தும் தமிழ் சினிமாவில் ஒரே சமயத்தில் பெரிய ஜாம்பவான்களாக வளர்ந்தனர்.

    9 ஆண்டுகள் கூட்டணி

    9 ஆண்டுகள் கூட்டணி

    அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய அத்தனை படங்களிலும் சந்தோஷ் நாராயணன் தான் தொடர்ந்து இசையமைத்து வந்தார். எல்லா படங்களிலும் பாடல்களும், பின்னணி இசையும் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்தாலே அந்த படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் என்கிற நிலை உருவாகி இருந்த நிலையில், திடீரென ஒரு பிரச்சனை முளைத்தது.

    'தெருக்குரல்' அறிவு பிரச்சனை

    'தெருக்குரல்' அறிவு பிரச்சனை

    சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தெருக்குரல் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனின் மகள் பாடகி தீ பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் உலகளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ரோலிங்ஸ்டோன் எனும் பிரபலமான மேகஸினில் பாடகி தீ மற்றும் ஹாலிவுட் ராப் சிங்கர் ஒருவரது புகைப்படம் மட்டுமே இடம் பெற, தெருக்குரல் அறிவு படம் ஏன் இடம் பெறவில்லை என்றும் சந்தோஷ் நாராயணன் இதற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என பா. ரஞ்சித் கோபித்துக் கொண்டது தான் இருவருக்கும் இடையே இப்படியொரு விரிசல் ஏற்பட காரணம் என தகவல்கள் வெளியாகின.

    இசையமைப்பாளர் மாற்றம்

    இசையமைப்பாளர் மாற்றம்

    சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்து இயக்கி உள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு இளையராஜா இசையமைக்கப் போகிறார் என முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால், டென்மா எனும் இசையமைப்பாளர் தான் அந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், சியான் 61 படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் - பா. ரஞ்சித் கூட்டணி இடம்பெறவில்லை.

    ஜிவி பிரகாஷ் தான் இசை

    ஜிவி பிரகாஷ் தான் இசை

    சியான் விக்ரமின் 61வது படத்தை பா. ரஞ்சித் இயக்கவுள்ள நிலையில், இந்த முறையும் அவர் சந்தோஷ் நாராயணன் உடன் இணைந்து பணியாற்றவில்லை. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷை இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே அது மட்டும் தான் பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவது தொழில் ரீதியான கருத்து மோதல்கள் காரணமா என ஏகப்பட்ட யூகங்களும் விவாதங்களும் கிளம்பி உள்ளன.

    English summary
    Pa Ranjith books GV Prakash Kumar for Chiyaan 61. From Attakathi to Sarpatta Parambarai Santhosh Narayanan only done music to Pa Ranjith movies, but now, the great combo splits due to some misunderstandings.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X